Sunday, January 8, 2012

கறுப்பு நிறத்தில் ஓர் வெளிச்சம் - லெமூரியன் பா Rsekar
***************************************************

திருமா என்றொரு
தலைவன் இருந்தான்
... ... தீப்பொறியாக எங்கள்
தெருவில் நுழைந்தான்
சேரிகள் எல்லாம் பத்திகிச்சு – அது
சிறுத்தையின் குறல் எடுத்து கத்திடுச்சு

உணர்வுகளை ஊற்றி ஊற்றி
உருவாக்கினான் – அவன்
ஒற்றை குறலையே
போர் பறையாக்கினான்…
காலனியில் கிடந்த எமை
கரையேற்றினான்
கட்டுக்கள் தகர்த்து எனை
படையாக்கினான்.

அவன் ஒற்றை
குறலுக்காய் ஓடோடினோம் – எங்கள்
உரிமைகளை மீட்டேடுக்க
போராடினோம்…

ஒடுங்கி கிடந்த நாங்கள்
அடங்க மறுத்தோம்
ஒவ்வோரு தடைகளிலும்
அத்து மீரினோம்
தீட்டிய கூர்வாளை
தலை நிமிர்த்தி பிடித்தோம் – எங்களை
தீட்டாக நினைத்தவனை
திருப்பி அடித்தோம்….

பறையனே என்றவர்கள்
பார்த்து நடுங்கினர் – நாங்கள்
தலைவனின் படையணி என்றதும்
பயந்து ஒதுங்கினர்…

சிறுத்தைகளின் பெயர்களை
தமிழாக்கினான் – அவன்
செயலாலே தமிழுக்கு
புத்துயிர் ஊட்டினான்…
ராஜாக்கள் எல்லாம்
மன்னராகினர்
விஜயன்கள் எல்லாம்
வெற்றியேகினர்…

ஈழத்து துயர்கேட்டு
இடியாய் விழுந்தாய் – அட
எங்களையும் அழைத்துகொண்டு
வெடியாய் எழுந்தாய்….
உறங்கி கிடந்த தமிழக
உறக்கம் அறுத்தாய்
உணர்வோடு அதை உசுப்ப
உணவை மறுத்தாய்

விழித்த தமிழகம்
பறபறத்தது ஆனால்
ஏனோ உன்னோடு
வர மறுத்தது…

ஒன்றுகூடி போராடா
ஓலை அனுப்பினாய்
ஓயாமல் உழைக்க உன்
திடம் தோளை அனுப்பினாய்
தீட்டுப்பட்டவன்
குறல் சென்று சேரலையே
திமிர் பிடித்த சாதிக் குட்டம்
இன்னும் மாறலையே…

அத்தோடு விட்டதா
ஆதிக்க கூட்டம் – உனை
அழிக்க அடுக்கடுக்காய்
பழி சுமத்தி சாதிச்ச கூட்டம்

துரோகி என்று உன் மீது
பொறித்து விட்டது – உன்
படையிலிருந்து சிலபேரை
பிரித்து விட்டது

சூழ்ச்சிக்கு பலியாகி
சுருண்டு விழுந்தோம் திருமா
உணகெதிராய் விரல்
நீட்டி நிமிர்ந்து எழுந்தோம்…

காலம் சில காலம் எமை
புறட்டிப் போட்டது
காலனிக்கே மீண்டும் எமை
விரட்டி விட்டது…
தமிழனாய் இருக்க நமக்கு
தகுதி இல்லையாம்
திருமா நாம்
தாழ் குடியில் பிறந்து வந்த
தீட்டுப்பிள்ளையாம்…
எனக்காக உழைத்தவனே
எங்கிருக்காய் வா வா
நான் மீணடும்
எந்திரித்து போர்புரிய
புது ரத்தம் தா தா

நீ உதிர்த்த வியர்வைகள்
ஒரு நாள் வெல்லும் – அதை
உணர்ந்த பின்பு உன் பெயரை
வரலாறு சொல்லும்……
மேலும் பார்க்க
பதிவை பார்வையிடுக · வியாழக்கி்ழமை , 15:21 க்கு ·
கறுப்பு நிறத்தில் ஓர் வெளிச்சம்
***************************************************

திருமா என்றொரு
தலைவன் இருந்தான்
... தீப்பொறியாக எங்கள்
தெருவில் நுழைந்தான்
சேரிகள் எல்லாம் பத்திகிச்சு – அது
சிறுத்தையின் குறல் எடுத்து கத்திடுச்சு

உணர்வுகளை ஊற்றி ஊற்றி
உருவாக்கினான் – அவன்
ஒற்றை குறலையே
போர் பறையாக்கினான்…
காலனியில் கிடந்த எமை
கரையேற்றினான்
கட்டுக்கள் தகர்த்து எனை
படையாக்கினான்.

அவன் ஒற்றை
குறலுக்காய் ஓடோடினோம் – எங்கள்
உரிமைகளை மீட்டேடுக்க
போராடினோம்…

ஒடுங்கி கிடந்த நாங்கள்
அடங்க மறுத்தோம்
ஒவ்வோரு தடைகளிலும்
அத்து மீரினோம்
தீட்டிய கூர்வாளை
தலை நிமிர்த்தி பிடித்தோம் – எங்களை
தீட்டாக நினைத்தவனை
திருப்பி அடித்தோம்….

பறையனே என்றவர்கள்
பார்த்து நடுங்கினர் – நாங்கள்
தலைவனின் படையணி என்றதும்
பயந்து ஒதுங்கினர்…

சிறுத்தைகளின் பெயர்களை
தமிழாக்கினான் – அவன்
செயலாலே தமிழுக்கு
புத்துயிர் ஊட்டினான்…
ராஜாக்கள் எல்லாம்
மன்னராகினர்
விஜயன்கள் எல்லாம்
வெற்றியேகினர்…

ஈழத்து துயர்கேட்டு
இடியாய் விழுந்தாய் – அட
எங்களையும் அழைத்துகொண்டு
வெடியாய் எழுந்தாய்….
உறங்கி கிடந்த தமிழக
உறக்கம் அறுத்தாய்
உணர்வோடு அதை உசுப்ப
உணவை மறுத்தாய்

விழித்த தமிழகம்
பறபறத்தது ஆனால்
ஏனோ உன்னோடு
வர மறுத்தது…

ஒன்றுகூடி போராடா
ஓலை அனுப்பினாய்
ஓயாமல் உழைக்க உன்
திடம் தோளை அனுப்பினாய்
தீட்டுப்பட்டவன்
குறல் சென்று சேரலையே
திமிர் பிடித்த சாதிக் குட்டம்
இன்னும் மாறலையே…

அத்தோடு விட்டதா
ஆதிக்க கூட்டம் – உனை
அழிக்க அடுக்கடுக்காய்
பழி சுமத்தி சாதிச்ச கூட்டம்

துரோகி என்று உன் மீது
பொறித்து விட்டது – உன்
படையிலிருந்து சிலபேரை
பிரித்து விட்டது

சூழ்ச்சிக்கு பலியாகி
சுருண்டு விழுந்தோம் திருமா
உணகெதிராய் விரல்
நீட்டி நிமிர்ந்து எழுந்தோம்…

காலம் சில காலம் எமை
புறட்டிப் போட்டது
காலனிக்கே மீண்டும் எமை
விரட்டி விட்டது…
தமிழனாய் இருக்க நமக்கு
தகுதி இல்லையாம்
திருமா நாம்
தாழ் குடியில் பிறந்து வந்த
தீட்டுப்பிள்ளையாம்…
எனக்காக உழைத்தவனே
எங்கிருக்காய் வா வா
நான் மீணடும்
எந்திரித்து போர்புரிய
புது ரத்தம் தா தா

நீ உதிர்த்த வியர்வைகள்
ஒரு நாள் வெல்லும் – அதை
உணர்ந்த பின்பு உன் பெயரை
வரலாறு சொல்லும்……
மேலும் பார்க்க

0 கருத்துரைகள்:

Post a Comment