Sunday, January 8, 2012

சீமானும் செல்வியும்

சீமானும் செல்வியும்

-ஷோபாசக்தி
யக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.
“நீ சொல்லும் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை, ஆனாலும் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக் கொடுத்துப் போராடவும் நான் தயார்” என்ற வோல்தயரின் புகழ்பெற்ற கூற்றை வெறுமனே வீம்புக்கு உச்சரிப்பவர்களில் நானும் ஒருவனல்ல. அந்தக் கூற்றை நான் முற்று முழுதாக விசுவாசிப்பவன். இந்திய அரசு, இலங்கை அரசு, அமெரிக்க அரசு என எது குறித்தும் எவர் வேண்டுமானாலும் தமது கருத்துகளைக் கூறலாம். அது ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிராகவும் இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம். அதைச் சொல்வதற்கு சாமான்யர்களுக்கும் தடையற்ற சுதந்திரம் வேண்டும். இதற்குப் பெயர்தான் முழுமையான கருத்துச் சுதந்திரம். அந்தக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் போது தடைமீறலும், உருவப்பொம்மை எரிப்புகளும் காலணியால் மூஞ்சிக்கு எறிதலும் மக்கள் திரளின் இயல்பான போராட்ட வடிவங்களே! அவை அறம் சார்ந்த நெறிகளே!
விடுதலைப் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் நிராகரிப்பவன் என்ற முறையில் நான் சீமான் உள்ளிட்டவர்கள் மீதான எனது விமரிசனத்தை ஏற்கனவே வைத்துள்ளேன். அதே வேளையில் கொளத்தூர் மணி போன்ற திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் பார்ப்பன எதிர்ப்பு, சாதியொழிப்பு, சமூகநீதிக்கான போராட்டம் போன்ற சீரிய அரசியல் பங்களிப்புகளை நாம் மறந்துவிட இயலாது. பார்ப்பனிய ஊடகங்களும் காங்கிரஸ் கட்சியினரும் இந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதன் பின்னணியில் அவர்களின் பாரம்பரியத் திராவிட இயக்க எதிர்ப்பும் ஒரு ஊக்கியாகச் செயற்படுவதையும் நாம் கவனிக்கலாம். உண்மையில் கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் அரசியல் அதிகாரங்களற்ற சாதாரணர்கள். புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் பால் தக்கரேயையோ மருத்துவர் இராமதாஸையோ இப்படிக் கைதுபண்ணிவிட இந்திய அரசால் முடியுமா? இந்திய ‘ஒருமைப்பாட்டுக்கு’ பங்கம் விளைவிப்பவர்களைக் கைது செய்வதென்றால் நம்பர்1 பயங்கரவாதி நரேந்திர மோடியையல்லவா முதலில் கைதுசெய்ய வேண்டும்.
சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுக்காக இந்தச் சிலிர்ப்புச் சிலிர்ப்பவர்கள் இந்தியா முழுவதும் காலவரையற்றுச் சிறைகளில் வாடும் அல்லது ‘என்கவுண்டர்’களில் சுட்டுத்தள்ளப்படும் நக்ஸ்பாரிகள் குறித்தோ இஸ்லாமியர்கள் குறித்தோ காஷ்மீரிகள் குறித்தோ ஏன் எதுவும் பேசுவதில்லை என்றொரு கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வி தருக்கத்துக்குப் பொருந்துமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தீபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்காதவர்கள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கக் கூடாது, திண்ணியம் கொடுமை குறித்துப் பேசாதவர்கள் கயர்லாஞ்சிக் கொடுமைகள் குறித்துப் பேசக் கூடாது என்றெல்லாம் நாம் சொல்ல முடியுமா என்ன. குறிப்பிட்ட இந்த அநீதியைக் கண்டித்தாவது பேசுகிறார்களே என்று நாம் அவர்களை ஆதரிப்பதும் அவர்களோடு இணைந்து நாமும் குறிப்பிட்ட அநீதியைக் கண்டிப்பதும்தானே சரியாயிருக்க முடியும். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிற அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாம் அவர்களிடம் கோர முடியும். குறிப்பிட்ட விடயத்தில் வெளிப்படும் அவர்களின் சனநாயக் குரலும் போராட்டப் பண்பும் உலகம் தழுவிய பார்வையாக விரிவடைய வேண்டும் என நாம் வேண்டிக்கொள்ள முடியும்.
முக்கியமாக சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுகளுக்காகக் கொந்தளிப்பவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அல்லது அனுதாபிகளாயிருப்பதால் இந்தத் திடீர்க் கருத்துச் சுதந்திர போராளிகளுக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள பொருந்தாத் தொடர்பு குறித்து இங்கே சற்று விளக்கவதும் பொருத்தமானதே. “தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க, தூங்காது செய்யும் வினை” என்கிறது தமிழ்மறை.
தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு இம்முறை பிணை மறுக்கப்பட்டிருப்பினும் அடுத்தடுத்த தவணைகளில் அவர்கள் வெளியே வருவார்கள். கொளத்தூர் மணி வருவது தாமதமாக வாய்ப்புகளிருப்பினும் அவரும் வெளியே வருவார் என்பது நிச்சயம். இவர்கள் மீதான விசாரணைகள் நடந்தாலும் அது நீதிமன்றங்களில் பகிரங்கமாக நடத்தப்படும். இவர்களுக்குத் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கும் தங்களுக்கென வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். “மாங்குயில் கூவிடும் பூங்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” எனச் சிறைச்சாலையைப் பூஞ்சோலையாக உருவகித்துச் சீமானும் மணியும் தாரளமாகப் பாடலாம். அப்படிப் பாடுவதுதான் திராவிட இயக்க மரபு. அப்படிப் பாட வாய்ப்புக் கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் மரபு.
ஆனால் தோழர்களே புலிகளால் கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன? விஜிதரன் எங்கே? தில்லை எங்கே? தீப்பொறி கோவிந்தன் எங்கே முருகநேசன் எங்கே? மத்தியாஸ் எங்கே? சின்ன மெண்டிஸ் எங்கே? பதுமன் எங்கே? கையில் மாற்றுடைகளுடன் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுவாயிலில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற மாத்தையா எங்கே? புலிகளின் சிறையில் ஒரே இரவில் அருணாவால் கொல்லப்பட்ட அய்ம்பத்தெட்டு உயிர்களுக்கும் வகையென்ன? பதிலென்ன? இப்படியாகப் புலிகளால் அவர்களின் சிறையில் சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கான நீதியை நாம் யாரிடம் கோருவது? இங்கே மாத்தையாவின் அரசியலுக்கோ சின்ன மெண்டிஸின் அரசியலுக்கோ வக்காலத்து வாங்குவதல்ல எனது நோக்கம். புலிகள் தங்களால் கைதுசெய்யப்படுபவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்லவே மேலுள்ளவர்களை உதாரணம் காட்ட நேரிட்டது. பல்கலைக் கழக மாணவனாகட்டும் தங்கள் இயக்கத்தின் பிரதித் தலைவராகட்டும் எல்லா முரண்களையும் புலிகள் கொலைகளாலேயே தீர்த்து வைத்தார்கள். புலிகளின் இராச்சியத்திலே சவக்குழிதான் நீதிமன்றம். துப்பாக்கிச் சனியன்தான் நீதிபதி.
இன்று சீமானின் குரலும் கொளத்தூர் மணியின் குரலும் நசுக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கிறோமே! அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாகப் பதறுகிறோமே, இதே பதற்றமும் துடிப்பும் கொதிப்பும் புலிகளால் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களின் விசயத்திலும் நமக்கு இருக்க வேண்டுமல்லவா. தமக்கு உவப்பில்லாத கருத்துகளைச் சொன்னதால் புலிகளால் கொல்லப்பட்ட அறிவுஜீவிகளுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாற்று இயக்கப் போராளிகளும் மிதவாதக் கட்சித் தலைவர்களுக்கும் கணக்கில்லையே! விஜயானந்தன், விமலேஸ்வரன், ராஜினி திரணகம, அ.அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், சின்னபாலா, அதிபர் இராசதுரை என்று எத்தனையோ மனிதர்களின் மாற்றுக் குரல்களை புலிகளால் துப்பாக்கியால் நிறுத்தியிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கங்கள், சாதி ஒழிப்பு அமைப்புகள் இடதுசாரிக்கட்சிகள் என எல்லாவகையான மாற்று அரசியல் இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டுள்ளன. புலிகளின் இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்பு ஈழத்தைத் தாண்டிப் புகலிடங்களுக்கும் பரவியது. சரிநிகர், தினமுரசு பத்திரிகைகள் புகலிட நாடுகளில் தடைசெய்யப்பட்டன. தொழிலாளர் பாதை, செந்தாமரை, மனிதம், தாயகம் போன்ற பல மாற்றுக் கருத்துப் பத்தரிகைகள் மிரட்டப்பட்டன. பத்திரிகையாளர்கள் தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டார்கள்.
இம்முறை சீமான் கைது செய்யப்பட்டபோது ஆயிரம் முறை கைதாவதற்குத் தான் தயாராயிருப்பதாக அவர் முழங்கினார். செல்வியும் சீமானைப் போல கலைத்துறை சார்ந்தவர்தான். அவர் நாடக இயக்குனர், நடிகை மற்றும் கவிஞர். கவிதைக்கான சர்வதேச விருதான PEN விருதைப் பெற்றவர். புலிகளுக்கு மாற்றான கருத்துகளை அவர் பேசியதால் அவர் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் சீமானைப்போல “ஆயிரம் தடவைகள் சிறை செல்லவும் தயார்” என்று அவர் சொல்வதற்கு வாய்ப்புகள் ஏதுமிருக்கவில்லை. ஏனெனில் புலிகள் அவரை ஒரு தடவைதான் கைது செய்தார்கள், அப்படியே கொன்று புதைத்துவிட்டார்கள்.
நாங்கள் தமிழக அரசின் கைதுகளைக் கண்டிக்கிறோம். சீமான், கொளத்தூர் மணி ஆகியோரின் கைதால் கவலையுற்றிருக்கும் தோழர்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம். புலிகளிடம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்துவிட்ட துயரிலும் இனியும் பறிகொடுக்கப்போகும் பதற்றத்திலுமிருக்கும் எங்கள் உணர்வுகளிலும் பங்கெடுக்குமாறு அந்தத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம். புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிராக இந்தத் தோழர்கள் வருங்காலங்களிலாவது குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். இதன் முலம்தான் கருத்துச் சுதந்திரம் மீதான அவர்களது வேட்கை முழுமை பெறுமென வலியுறுத்தவும் விரும்புகிறோம்.
இரு பின்குறிப்புகள்:
1. சிறைச்சாலை, பூஞ்சோலை என்பதெல்லாம் சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் விவகாரங்களில் சாத்தியமானது. ஆனால் அப்சல் குரு போன்ற எண்ணற்றவர்களுக்கு இந்திய அரசு சட்டபூர்வமான உதவிகளைக் கூட மறுத்திருக்கிறது என்ற புரிதலுடனேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
2. புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைப் படிக்கும் ஒருவர் கொடுப்புக்குள் ஓர் ஏளனப் புன்னகையுடன் ‘துரோகிகள் கொல்லப்படத்தான் வேண்டும்’ என முணுமுணுப்பாரானால் அவருக்குக் கருத்துச் சுதந்திரம், வன்முறை எதிர்ப்பு, மணதண்டனை ஒழிப்புக் குறித்தெல்லாம் பேச எந்த யோக்கியதையும் கிடையாது என்பதை ஒருகணம் மனதில் நிறுத்திக்கொண்டு விட்ட இடத்திலிருந்து அவர் புன்னகையைத் தொடராலாம்

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம்

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (30)
30. ‘மார்க்சியவாதிகள்’ திசைமாறி தமிழ் தேசியவாதிகளுடன் இணைந்தமைக்கான காரணிகள்!
karthigeyanஎமது கட்சியிலிருந்து தமிழ் தேசியவாத இயக்கங்களுடைய அணிகளுக்குத் தாவியோர் பட்டியல் சற்று நீண்டது. புலிகளுடன் மட்டுமின்றி அநேகமாக எல்லா இயக்கங்களிலும் அவர்கள் இணைந்தனர் என்று கூறலாம்.

புளொட் இயக்கத்திலும் தோழர்கள் கரவை கந்தசாமி, அ.கௌரிகாந்தன் போன்றோர் இணைந்ததுடன் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தனர்.

அதேமாதிரி எமது கட்சியின் வட பிரதேச முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் வீ.ஏ.கந்தசாமி உட்பட கே.சுப்பையா, எஸ்.சிவதாசன் போன்றோர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இணைந்து முக்கிய பொறுப்புகளில் இருந்து செயல்பட்டனர். (சிவதாசன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து விலகி ஈ.பி.டி.பி கட்சியை ஆரம்பித்த போது அதில் சேர்ந்து, பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து அண்மையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது)

முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்சி மற்றும் விவசாயிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த தோழர்கள் இ.வே.துரைரத்தினம், இ.விக்கினராஜா, க.கந்தசாமி போன்ற தோழர்கள் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்ததுடன் பாராளுமன்றத் தேர்தல்களிலும் அவ்வியக்கத்தின் சார்பாகப் போட்டியிட்டனர்.

நெல்லியடி – கரவெட்டி பகுதிகளைச் சேர்ந்த சில தோழர்கள் ரெலோ இயக்கத்தின் தாஸ் பிரிவுடன் தொடர்பு வைத்து வேலை செய்தனர்.

இதுதவிர எமது கட்சியே நேரடியாக ஆரம்பித்த ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பில் கட்சி சார்பாக பல தோழர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த முன்னணியில் முக்கிய பொறுப்பு வகித்த தோழர் வி.விசுவானந்ததேவன் எமது கட்சி மீதான நம்பிக்கையை இழந்து, ஜனநாயக முன்னணி மீதான கட்சித் தலைமையை நிராகரித்து, அதன் பெயரை ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) என பெயர் மாற்றி தனியாகச் செயற்பட்ட போதும், பின்னர் அதில் பிளவு ஏற்பட்டு ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்பை உருவாக்கிய போதும், பல கட்சி உறுப்பினர்கள் அந்த இயக்கங்களில் சேர்ந்து செயல்பட்டனர்.

இவ்வாறாக எமது கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இயக்கங்களை VAKநாடிச் சென்றுவிட்ட ஒரு சூழலில், என்னைப் போன்ற சிலர் தான் கட்சியில் எஞ்சியிருந்தோம். கட்சி முற்றுமுழுதான ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்தது என்றே கூறலாம். இருப்பினும் இன்று திரும்பிப் பார்க்கையில், தமிழ் தேசியவாத இயக்கங்களில் முதன்மை இடம் வகித்த விடுதலைப் புலிகளின் முற்றுமுழுதான அழிவும், ஏனைய இயக்கங்கள் கூட இன்றும் அந்த தமிழ் தேசியவாத அரசியல் போக்கிலிருந்து மீள முடியாமல், இரண்டும் கெட்டான் நிலையில் அரசியல் எதிர்காலம் இல்லாமல் தத்தளிப்பதுமான சூழலில், எம்முடன் உறுதியுடன் எஞ்சி நின்ற தோழர்களின் நிலைப்பாட்டில் இருந்த தெளிவையும், நம்பிக்கையையும் எண்ணிப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

எம்மைவிட்டுச் சென்றவர்களின் தவறைக் கேலி செய்வதோ, அவர்கள் நம்பிச் சென்ற இயக்கங்களின் அர்ப்பணிப்புகளைக் கொச்சைப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. தமிழ் தேசியவாத இயக்கங்கள் அவர்களது முன்னோடி கட்சிகளான தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து முளை விட்டதால், அவர்களைக் குறை கூறுவதில் பிரயோசனம் இல்லை.

ஆனால் எமது கட்சியிலிருந்து அந்த இயக்கங்களுக்குச் சென்றவர்கள் நிச்சயம் விமர்சனத்துக்கு உரியவர்கள். ஏனெனில் எமது கட்சி என்பது வெறுமனே ஒரு கதம்பக் கூட்டமல்ல. கட்சியின் வாலிப அணியில் இணைவதென்றாலே நீண்டகாலம் பல்வேறு துறைகளில் உழைத்தே அதை அடைய முடியும். முதலில் ஆழமான தத்துவார்த்தக் கல்வியும், பின்னர் வெகுஜன அமைப்புகளில் வேலையும் கட்டாய நடைமுறைகளாகும். இப்படியான அக்கினி பரீட்சைகளுக்குள்ளால் வந்தவர்கள், இனத் தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்படுவதென்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஆனால் திசைமாறிச் சென்ற தோழர்களின் தவறை, வெறுமனே அவர்கள் குற்றமாக மட்டும் வைத்து நோக்குவதும் தவறாகும். அந்த நிலைமைக்கு கட்சித் தலைமையும் கணிசமான பொறுப்புதாரியாகும். முக்கியமாக தேசிய இனப்பிரச்சினையில் எப்படி வேலை செய்வது என்ற வேலைத்திட்டத்தை கட்சி ஒருபோதுமே வகுத்திருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி 1943ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் 1944ல் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றும், அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டென்றும் சரியாகவே தீர்மானித்திருந்தது. இது லெனினிசக் கோட்பாட்டின் தாக்கத்தின் அடிப்படயில் எடுத்த ஒரு தீர்மானமாகும். அதன் பின்னர் 1954ல் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கட்சியின் வட பிரதேச மாநாட்டில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு ‘பிராந்திய சுயாட்சி’ (சுநபழையெட யுரவழழெஅல) வழங்கப்பட வேண்டும் என்ற இன்னொரு சரியான தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தத் தீர்மானங்களுக்காக வேலை செய்வதற்கான திட்டங்கள் எதுவும் கட்சியின் தேசிய வேலைத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 1964ல் கட்சி சர்வதேசரீதியில் ஏற்பட்ட சித்தாந்த முரண்பாடு காரணமாக மொஸ்கோ அணி – பீக்கிங் அணி எனப் பிளவுண்ட போது, இரு அணிகளும் சம்பிரதாயபூர்வமாக பிராந்திய சுயாட்சி தீர்மானத்தைக் கூறி வந்தனவேயொழிய அதற்காக வேலை செய்யவில்லை.

இதில் இன்னும் மோசமான விடயம் என்னவெனில், பாராளுமன்றவாதப் பாதையில் சென்ற மொஸ்கோ அணி தாம் கூட்டுச் சேர்ந்திருந்த சிங்கள தேசிய முதலாளித்துவவாத சக்திகளுடன் சேர்ந்து, சிங்கள மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக “தோசை – மசாலவடை” என இனவாதக் கோசங்களைக்கூட எழுப்பினர். பிற்காலத்தில் அந்தத் தவறு சீர்செய்யப்பட்டதாயினும், கட்சியின் வரலாற்றில் அந்தக் கறை எப்பொழுதும் அழியாத அடையாளமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மறுபக்கத்தில் பாராளுமன்றவாதப் பாதையை நிராகரித்து புரட்சிகரப் பாதையில் பயணிப்பதாகச் சொன்ன பீக்கிங் அணிக்கு (நானும் அதில்தான் இருந்தேன்) தலைமைவகுத்த நா.சண்முகதாசன், தோழா ஸ்டாலின் அன்றைய ரஸ்ய சூழலில் ஒரு தேசிய இனத்துக்கு வரைவிலக்கணமாகக் கூறிய நான்கு விதி முறைகளை வைத்துக்கொண்டு, இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமே அல்ல என்று வாதிட்டு வந்தார். தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் ‘மணி ஓடர்’ (ஆழநெல ழுசனநச) பொருளாதாரம் என்றே அவர் குறிப்பிட்டு வந்தார். தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்காகப் போராடுவது என்பது, ‘வகுப்புவாதம்’ என அவரது தலைமை வாதிட்டது. மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் ஓரளவு பலமான போராட்டக் குணாம்சம் மிக்க ‘செங்கொடிச் சங்கம்’ என்ற தொழிற்சங்கம் ஒன்றை கட்சி வைத்திருந்த போதும், அந்த மக்கள் வளர்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்பதைக் கணக்கில் எடுக்கத் தவறி, அவர்கள் மத்தியில் தொழிற்சங்கப் போராட்டங்களுடன் தனது பணியை மட்டுப்படுத்திக் கொண்டது.

1970ல் சிறீலங்கா – சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்னர், 1971ல் ஏற்பட்ட ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி காரணமாகவும், 1972ல் அந்த அரசாங்கம் கொண்டு வந்த புதிய குடியரசு அரசியல் யாப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழ் தேசியவாதப் போராட்டம் காரணமாகவும், எமது பீக்கிங் சார்புக் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் தோன்றின.

குறிப்பாக இனப்பிரச்சினை விவகாரத்தில் இரண்டு போக்குகள் உருவாகின. சண்முகதாசனும் அவரது ஆதரவாளர்களும் இனப்பிரச்சினை கூர்மையடைந்து வருவதையும், அது சம்பந்தமாக கட்சி வேலை செய்ய வேண்டிய அவசியத்தையும் நிராகரித்து, பழைய பாணியிலேயே சென்றனர். ஆனால் கட்சிக்குள் உண்மையான மார்க்சிச – லெனினிசவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய தோழர்கள் மு.கார்த்திகேசன் - வீ.ஏ.கந்தசாமி தலைமையிலான அணியினர், தேசிய இனப்பிரச்சினையில் உருவாகியுள்ள புதிய சூழல்களைக் கவனத்தில் எடுத்து, கட்சி அதற்குரிய வகையில் வேலை செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

தோழர் கார்த்திகேசன் - கந்தசாமி அணியினர் கருத்துப்படி, தமிழ் முதலாளித்துவ பிற்போக்கு தேசியவாத சக்திகளால் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு அழிவை உண்டுபண்ணும் வகையிலும் முன்வைக்கப்படும் தனித்தமிழ் நாட்டுப் போராட்டம் தவறானது, அதை மார்க்சிஸ்ட்டுகள் எதிர்க்க வேண்டும், அதேநேரத்தில் தமிழ் மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறையையும் எதிர்க்க வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை முன்வைத்தனர். இந்த நிலைப்பாட்டையும,; வேறு சில அடிப்படை விடயங்களில் சரியான நிலைப்பாட்டையும் (ஐக்கிய முன்னணி, தேர்தல் போன்ற) சண்முகதாசன் அணியினர் ஏற்க மறுத்ததால், 1972ல் கட்சியில் பிளவு தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

அதன் பின்னர் உருவான இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியே தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான இரண்டு நாள் விசேட தேசிய மாநாடு ஒன்றைக் கொழும்பில் நடாத்தி, அப்பிரச்சினையில் கட்சியின் சரியான கொள்கையை மீள உறுதி செய்ததுடன், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியையும் உருவாக்கியது. ஆனால் புறச்சூழலில் உருவாகிவந்த தீவிரமான தமிழ் தேசியவாத அலைக்கு முகம் கொடுத்து, அப்போராட்டத்தைச் சரியான தலைமையிலும் திசை வழியிலும் கொண்டு செல்வதற்கான கால அவகாசமும், பலமும் கட்சிக்கு இல்லாததால், இறுதியில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியும் தவறான பாதையிலேயே பயணித்தது.

இந்தச் சூழலில் தேசிய இனப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை, குறிப்பாக செயல்பூர்வமான திட்டத்தைக் கொண்டிருக்காமையும், ஆயுதப்போராட்டம் பற்றி இலங்கையிலேயே முதன்முதலாகப் பிரச்சாரம் செய்த எமது கட்சி அதற்கான வேலைத்திட்டங்கள் எதையும் கொண்டிராமையும் (இன்றைய சூழலில் ஆயுதப்போராட்டம் என்பதே கேள்விக்குரியதாகும்) எமது கட்சியின் இளம் சிங்களத் தோழர்களை ஜே.வி.பியின் பக்கமும், இளம் தமிழ் தோழர்களை பல்வேறு தமிழ் தேசியவாத இயக்கங்களின் பக்கமும் தள்ளியதற்கு காரணங்களாக அமைந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தத் தோழர்கள் இன்று தமது அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அநாதரவாக நிற்பதுதான் வேதனைக்குரியது.

இருந்த போதிலும், எந்தவொரு தேசியவாத இயக்கங்களிலும் இணையாமல் நம்பிக்கையுடன் பொறுமையாக சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த தோழர்கள் என்றென்றும் மதிப்புக்குரியவர்கள் என்பதுடன், புலிகளின் அழிவுக்குப் பின்னர் உருவாகியுள்ள ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் இடதுசாரிப் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்பும் அரிய சந்தர்ப்பத்தையும் பெற்றுள்ளனர்.

ஆனால் நான் ஏன் எந்தவொரு தமிழ் தேசியவாத இயக்கத்திலும் சேரவில்லை என புலிகளின் விசாரணையாளன் தயாபரன் கேள்வி கேட்ட காலமோ, நான் சுதந்திரமாகக் கருத்துச் சொல்ல முடியாத ஒரு காலகட்டம். அத்துடன் கொடும் புலிகளின் கைகளில் அகப்பட்ட சிறைப் பறவையும்கூட. இருந்தும் மனம் கேட்காமல் நான் அவனுக்கு எனது மனதில் இருந்ததைப் பதிலாகச் சொல்லப்போய், பெரும் விபரீதத்தில் மாட்டிக் கொண்டேன். இதைத்தான் ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றனர் போலும்!

தொடரும்

முன்னொரு காலத்தில் ‘பொங்கல்’ இருந்தது

முன்னொரு காலத்தில் ‘பொங்கல்’ இருந்தது

-ஷோபாசக்தி
முற்றுகைக்குள் சிக்கியிருந்த கிளிநொச்சி ஜனவரி 2ம் தேதி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தது. அதே நாளில் கொழும்பில் வான்படைத் தலைமையகம் முன்பாக மனித வெடிகுண்டு வெடித்தது. அன்று முழுவதும் தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் தூங்கச் சென்று ஒருகண் மூடியபோது ‘த சண்டே இந்தியன்’ பத்திரிகையிலிருந்து போன் செய்து ‘பொங்கல் குறித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா’ எனக் கேட்டார்கள். பொங்கல் வரப்போவது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது.
போருக்கு முந்தைய ஈழத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் குறித்த சித்திரத்தை எஸ்.பொ. தனது ‘நனவிடை தோய்தல்’ நூலில் சுவைபட எழுதியிருப்பார். பொங்கல் நாளின் குதூகலமும் கிளர்ச்சியும் அந்தச் சித்திரத்தில் விரிந்து கிடக்கும். நான் சிறுவனாயிருந்தபோது நாங்கள் வேதக்காரக் குடும்பம் என்பதால் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. பக்கத்திலிருந்த சைவக்கார வீடுகளிலிருந்து பொங்கலும் சுண்டலும் சுடச்சுட எங்கள் வீட்டுக்கு வரும். எண்பதுகளில் சர்ச்சுகளில் பொங்கலிடும் வழக்கம் தொடங்கியது. தைப்பொங்கல் இந்துப் பண்டிகை கிடையாது அது தமிழர்களின் பண்டிகை என்றார்கள் பாதிரிகள்.
பொங்கல் தமிழர்களின் பண்டிகை கிடையாது என்பதோடு எந்தப் பண்டிகையையும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையாகக் கருத முடியாது என்பதே எனது கருத்து. இல்லை பொங்கல் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையே என்றால் எப்போதிருந்து அது அவ்வாறிருக்கிறது?
ஈழத்தில் அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு தலித் பெண்களுக்கு மேலாடை அணியத் தடையிருந்து. ஆண்களுக்கு முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டத் தடையிருந்தது. கோயிலுக்குள் போக முடியாது, வெளியேயிருந்து தேங்காயும் உடைக்கக் கூடாது. நகை அணியக்கூடாது, மங்கல வாத்தியங்கள் உபயோகிக்க முடியாது. அப்படியானால் தலித் மக்கள் அரைநிர்வாணிகளாகக் கூனிக் குறுகி நின்றா தமிழர் பண்டிகையில் பொங்கலிட்டிருப்பார்கள்! உண்மையில் அந்த தமிழ்ப் பண்டிகையின் போது அவர்கள் கமக்காரர்களின் வீட்டின் பின்புறம் குந்தியிருந்து சிரட்டையில் ஆறிப்போன பொங்கலை இரந்து தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இதற்குப் பெயர் தமிழ் விழாவா? இல்லை, சாதி இந்துக்களின் விழாவா?
அப்போது ஈழத்தில் பொங்கல் பண்டிகை சைவ வெள்ளாளர்களின், இடைநிலைச் சாதிகளின் பண்டிகையாக மட்டுமேயிருந்தது. 1950களில் தலித் மக்களின் போராட்டத்தால் நகரங்களிலிருந்த சில இந்துக் கோயில்கள் திறந்துவிடப்பட்டதன் பின்னாக நகரம் சார்ந்த தலித் மக்களிடமும் இந்துப் பண்டிகைகள் கொண்டாடும் வழக்கங்கள் உருவாகின. அப்படியாரு தலித் குடும்பத்தில் நடந்த பொங்கல் பண்டிகையைத்தான் எஸ்.பொ. தனது நூலில் சித்திரிக்கிறார்.
தமிழ்ச் சமூகத்தில் ஊரும் சேரியும் பிரிந்திருக்கும்வரை, கோயில் கருவறைகளுக்குள் தலித்துகளும் பெண்களும் பிரவேசிக்காதவரை, தீண்டாமையும் தீட்டும் ஒழியாதவரை தமிழ்க் கலாச்சாரம், தமிழ்ப் பண்டிகை என்றெல்லாம் பேசுவது அயோக்கியத்தனம். ஆதிக்க சாதிக் கலாச்சாரத்தையும் மரபுகளையும் அவர்கள் மெல்ல மெல்லத் தமிழ்க் கலாச்சாரமாக நிறுவ முயல்வார்கள். நாம் தான் துள்ளத் துடிக்கக் கேள்விகளை எழுப்பி அவற்றை மறுக்க வேண்டியிருக்கிறது.
அய்ரோப்பாவில் தை மாதத்தில் மதியத்திற்குப் பின்புதான் சூரியன் எழும். சிலசமயம் நாள்முழுதும் வராமலேயேயிருந்துவிடும். சூரியன் வரும்வரை நாம் வேலைக்குப் போகாமல் காத்திருக்க முடியுமா! வேலை இல்லாதவர்கள் வீட்டுக்குள் காஸ் அடுப்பில் பொங்கல் செய்ய வாய்ப்புண்டு. அதிலொன்றும் கெடுதலில்லை. ஏனெனில் பெரும்பாலான அய்ரோப்பியத் தமிழர்களிடம் காலையுணவு அருந்தும் வழக்கம் கிடையாது. அன்றொரு நாளிலாவது அவர்கள் காலையில் சாப்பிடட்டும். ‘அல்சர்’ தள்ளிப்போகும்.
பொங்கல் பண்டிகையால் புலம் பெயர் நாடுகளிலுள்ள இந்துக் கோயில்களுக்கும் தமிழர்கள் கடைகளுக்கும் ஓரளவு வியாபாரம் நடக்கும். இப்படியான விழாக்களில் இங்குள்ள தமிழர் கலாச்சார அமைப்புகள் கணிசமான காசு பார்த்துவிடுவதுண்டு. போரிலேயே இலாபம் சம்பாதிக்கத் துடிக்கும் அவர்கள் பொங்கலை விட்டுவிடுவார்களா என்ன. இம்முறை லண்டனில் நடக்கவிருக்கும் பொங்கல் விழாவுக்கு தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களும் ‘கலக்கப்போவது யாரு’ கோமாளிகளும் வந்து தமிழர் பண்பாட்டை வளர்க்கவிருக்கிறார்கள். பொங்கல் விழாக்களைக் கொண்டாடும் அய்ரோப்பியத் தமிழ் கலாச்சார அமைப்புகள் இது தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் நிகழ்வெனக் கூறி நகரசபைகளில் இருந்து பணத்தைச் சுருட்டிச் சட்டைப்பையில் வைத்துவிட்டு விழாவுக்கு வருபவர்கள் நக்குவதற்கு நாலு பருக்கை பொங்கல் கொடுப்பார்கள். திரையரங்குகளில் பொங்கல் படங்கள் வெளியாகும். ‘ஐங்கரன்’ முதலாளி இன்னொரு சுற்றுப் பெருப்பார். அய்ரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். கமல்ஹாஸன் உலகமகா கலைஞர், ஷங்கர் உலக மெகா கிழிஞர் போன்ற நகைச்சுவை நிகழ்வுகளும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இருக்கும்.
இங்கே வியாபாரிகளுக்கும் கலாச்சாரக் காவலர்களுக்கும் மதத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்களுக்கும் நம் தாயகத்திலே ஒரு கொடிய போர் நடந்துகொண்டிருக்கிறது என்ற சூடு சொரணை இல்லாதவர்களுக்கும் மட்டுமே பொங்கல் தினம் பண்டிகை நாள். மற்றவர்களுக்கு அது மற்றுமொரு நாள்.
அய்ரோப்பிய தமிழர்கள் மத்தியிலிருக்கும் கலாச்சார அமைப்புகள் அயோக்கியத்தனத்தின் உச்சங்கள். உணர்வுபூர்மாக மாவீரர் நாளை அனுட்டிப்பது மாதிரி நடிப்பார்கள். ஏதாவது ஒரு போர் முனையில் அய்ம்பது புலிகள் செத்து விட்டார்கள் என்ற செய்திவரும்போது இவர்கள் தமிழர் விளையாட்டு விழா நடத்தி, அங்கே கொத்து ரொட்டியும் ஒடியற் கூழும் விற்றுக் கேளிக்கை நடத்திக்கொண்டிருப்பார்கள். வன்னியில் பசியால் சனங்கள் செத்துக்கொண்டிருக்க இவர்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை வீதியில் உடைத்துத் தேரில் குளவிக்கல்லை வைத்து இழுத்து வருவார்கள். அன்றைய ஒரு நாள் செலவில் முழு வன்னிக்கும் ஒரு வாரத்திற்கு உணவு வழங்க முடியும். தாயகத்தில் குழந்தைகள் பாலில்லாமல் மடியும்போது இந்தக் கொழுப்பேறியவர்கள் பிரான்ஸ் லூர்து மாதா சர்ச்சிலும் ஜெர்மனி கேவலார் மாதா கோயிலிலும் புளியேப்பக்காரப் பக்தர்களுக்குப் பிரியாணிப் பொட்டலங்கள் வழங்கிக்கொண்டிருப்பார்கள்.
யுத்தத்தின் பொருட்டும் அகதி வாழ்வின் பொருட்டும் ஒவ்வொரு தனி மனிதனும் தனது இயல்பான விருப்புகளை ஒறுப்புச் செய்ய வேண்டுமென நாம் சொல்ல முடியாது. ஆனால் தமிழர் பண்பாடு, தமிழர் கலை வளர்ச்சி என்று சொல்லிச் சொல்லியே ஊர்ப்பணத்தில் கூத்தடிக்கும் அமைப்புகளின் அட்டகாசத்தைத்தான் நம்மால் பொறுக்க முடியவில்லை. இந்தப் பொங்கலுக்கு இந்தப் பாவிகள் இன்னும் என்னென்ன கூத்தடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
ஈழத்தின் வடபகுதி முழுவதும் நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரத் தடை அமுலிலுள்ளது. வேலைகள் கிடையாது, கடலில் மீன்பிடிக்கக் கட்டுப்பாடு, அதீத விலைவாசி உயர்வு, மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை, காரணமற்ற கைதுகள், கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள், விமானக் குண்டு வீச்சுகள் என்று ஒரு தேசமே திறந்தவெளிச் சிறைச்சாலையில் தவித்துக்கொண்டிருக்கையில் நமக்குப் பொங்கல் ஒரு கேடா எனபதுதான் புலம்பெயர்ந்த சுரணையுள்ள தமிழர்களின் மனநிலை. இதை உணருவதற்கு சுரணைகூடத் தேவையில்லை கொஞ்சம் மனிதநேயம் இருந்தாலே போதுமானது.
ஈழத் தமிழர்களுக்குப் பண்டிகைகளும் கேளிக்கைகளும் களியாட்டங்களும் பழைய கதைதான். பண்டிகை நாட்கள் வழங்கும் கிளர்ச்சியும் இனிமையும் இனி இல்லையா எனக் கேட்பீர்களானால் இருக்கிறது நண்பர்களே என்பதே எனது பதில். பொங்கல் நாளில் எஸ்.பொவின் ‘நனவிடை தோய்தல்’ நூலில் வரும் பொங்கல் குறித்த சித்திரத்தைப் படியங்கள். இப்போது படித்தாலும் அது திகட்டாது. அப்படியானால் சித்திரைப் புத்தாண்டுக்கு என்ன செய்வது என்றா கேட்கிறீர்கள். அது குறித்தும் எஸ்.பொ. ‘தேர்’ என்று அருமையான ஒரு கதை எழுதியிருக்கிறார். தீபாவளிக்கு? இருக்கவே இருக்கிறது கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

ஜாதியை அடியோடு அழிக்க பன்னாட்டுச் சமூகம் முன்வர வேண்டும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
ஆசியாவிலிருந்து சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று அண்மையில் என்னைச் சந்தித்து, உடைத்து எறியப்பட்ட பொதுக் கழிவறையின் சுவரிலிருந்த ஓர் செங்கல்லை என்னிடம் அளித்தனர். அந்தச் செங்கலானது, "கீழ் சாதி'யினரை வெறுங்கையால் பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்த நிர்பந்திக்கும் அவலமான வழக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் குறியீடாகும்.
இந்த அவலமான வழக்கம், சட்ட ரீதியான தடைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்த போதிலும் பல பகுதிகளில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்த வேலையை எவரும் விருப்பத்தின் காரணமாக செய்வதில்லை. இது, அவர்களின் சமூக மூலமான சாதியின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. அதன் விளைவாக, ஒதுக்கப்பட்ட இம்மக்கள், வேலையால் மேலும் அழுக்கான வர்களாக்கப்பட்டுபரம்பரை பரம்பரையாக சமூகத்தில் நிலவக் கூடிய தனிமைப் படுத்துதலில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இன்று சாதியால் பாதிப்பிற்குள்ளான சமூகங்களும், சமூக ஆர்வலர்களும்இன்னும் பலமாக கட்டப்பட்டுள்ள, கண்ணுக்குப் புலப்படாத "ஒதுக்கப்படுதல்' எனும் பெருஞ்சுவரைத் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதற்காக புதிய சர்வதேச சமத்துவ நிலைகளையும், பாகுபாடற்ற நிலைகளையும் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய மன உறுதியின் மீதும், தைரியத்தின் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மை கறுப்பினப் பெண்ணாக வளர்ந்த எனக்கு "ஒதுக்கப்படுதல்' என்பதின் பொருள் நன்கு புரியும்.
நவி பிள்ளை, அய்.நா. அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்
தீண்டாமை என்னும் சமூக அவலம் உலகெங்கும் சுமார் 26 கோடி மக்களை பாதிக்கிறது. இம்மாதிரியான ஒதுக்கப்படுதல் பல்வேறு சமூக, பண்பாடுகளில் ஆழமாகக் காணப்படும் சடங்கு ரீதியிலான கொள்கைகளில் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த அவலம் ஒரு குறிப்பிட்ட பூகோள பகுதியிலோ, குறிப்பிட்ட மதத்தில் மட்டுமோ நடைபெறும் செயல் அல்ல. இது ஒரு சர்வதேச அவலம்.
மனித உரிமையின் அடிப்படைப் பண்புக் கூறுகளான பாகுபாடு காட்டாமை, வேற்றுமையின்மை ஆகியவற்றை சாதி மறுக்கிறது. அது ஒருவனை பிறப்பிலிருந்தே பழிக்கு உள்ளாக்குகிறது. அவன் சார்ந்த சமூகத்தை சுரண்டலுக்கும், வன்முறைக்கும், சமூக ஒதுக்குதலுக்கும், வெறுத்து ஒதுக்கப்படுவதற்கும் உள்ளாக்குகிறது. சாதிய பாகுபாடுமனித உரிமை மீறல் மட்டுமின்றி, அதனால் பாதிக்கப்படுபவர்களின் இன்னும் பிற சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் ஏதுவாகிறது.
"கீழ் சாதியினர்' என முத்திரையிடப்பட்ட நபர்கள், தலைமுறை தலைமுறையாக குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களையே செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு விவசாயம் செய்ய நிலங்களோ, அதற்கு கடனுதவிகளோ கிடைப்பதில்லை. இவர்கள் மீளமுடியாத கடன் சுமையினால், கொத்தடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். தற்கால அகராதியில் இதை அடிமை வாழ்வு என்றே அழைக்க வேண்டும். நீதிக்காகவும், இழப்பீடுகளுக்காகவும் இம்மக்கள் கடக்க வேண்டிய தடைகள் அசாதாரணமானவை. பிறப்பின் அடிப்படையில் "கீழ்சாதி' எனப்படுபவர்களின் குழந்தைகளிடையேதான் குழந்தைத் தொழிலாளர் முறையும், அதிக எழுத்தறிவின்மையும் காணப்படுகின்றன. பெண்களுக்கு சாதி என்பது, அவர்களுடைய துயரைப் பன்மடங்காக்கும் கூராகும். இதனால் வறுமையும், ஒதுக்கப்படுதலும் அதிகரிக்கவே செய்யும்.
இந்த அவலத்தைத் தடுக்க பல நாடுகளில் சட்டமும், கொள்கைகளும் இருக்கின்றன. சாதி ரீதியான பாகுபாட்டை அரசியல் சட்டங்கள் தடை செய்துள்ளன. "கீழ் சாதி'யை சேர்ந்தவர்கள் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுரண்டலுக்கும், வன்முறைக்கும் எதிரான பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை என சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்படுவோர்க்கு நீதியும், இழப்பீடும் வழங்க நீதித்துறை தலையிட்டிருக்கிறது. நிலைமைகளை கண்காணித்து "கீழ் சாதி' மக்களுக்கு ஆலோசனை வழங்க அர்ப்பணிப்புள்ள நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அனைத்து வகை இனப்பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தம், இனப்பாகுபாட்டிற்கான அடிப்படை பிறப்பு ரீதியிலானது என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. டர்பன் மாநாட்டுப் பிரகடனமும், 2001இல் இனவாதத்திற்கு எதிராக உலக அரங்கில் கொண்டு வரப்பட்ட செயல்திட்டமும், பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வேறுபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன. அந்தப் பாகுபாட்டை களைவதற்கு தெளிவான செயல் திட்டத்தையும் அவை அளித்துள்ளன. அச்செயல்திட்டத்தை ஏப்ரல் 2009இல் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
எனினும் சாதிய வேறுபாடுகளைக் களைய, இலக்கு நோக்கிய சமூகக் கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பிறப்பு, அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமாகப் பதிந்துள்ள சமூக, பண்பாட்டு நம்பிக்கைகளை மாற்றுவதற்கு கல்வித் திட்டங்கள் அவசரமான, தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்திற்கும் மேலாக சாதிய பாகுபாட்டிற்கு உள்ளான இனக்குழுக்களுக்குஅவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும், மதிப்பீடு செய்வதிலும் முழு உரிமைகளையும் கொடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக பன்னாட்டு சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததுபோல, இந்த முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
மக்களை வறுமையிலும், நம்பிக்கையற்ற வாழ்விலும் தள்ளும் வெறுக்கத்தக்க செயல்களானஒதுக்கப்படுவதற்கும், விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது உடனடி தேவை. இது, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்க சாதி வேட்பாளருக்கு வாக்களிக்க மறுத்து, தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்ததால் ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட "கீழ் சாதி' குடும்பங்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. அரசாங்கத்தின் பொது நலத் திட்டங்களால் பயன் பெற முடியாமல் சாவோடு போராடிய "கீழ் சாதி' மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. பொது இடத்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட கீழ் சாதி பெண்ணுக்கும், ஆதிக்க சாதியினரால் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்டு, தன் கழிவையே தின்ன வைக்கப்பட்ட பெண்ணுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை.
சாதியால் பாதிக்கப்பட்ட அனை வருக்கும் நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும். பாரம்பரியம், வழக்கம் என்று கூறியோ "குலத் தொழில்' என்று கூறியோ கோடிக்கணக்கான மக்களின் அவல நிலையை நியாயப்படுத்த முடியாது.
மனித உரிமைகளை காக்கவும், வளர்க்கவும் பல நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பான மனித உரிமைக் குழுவானது, "வேலை மற்றும் பரம்பரை அடிப்படையிலான பாகுபாடுகளை திறம்பட நீக்குவதற்கான வரைவுக் கோட்பாடு மற்றும் வழிகாட்டு நெறிகள் – 2009அய்' ஆதரித்து ஆக்கப்படுத்த வேண்டும். இவ்வறிக்கை இனப்பாகுபாட்டிற்கு எதிராக தற்பொழுதுள்ள நியதிகளையும் கோட்பாடுகளையும் முழுமையாக்குகிறது. இந்த கட்டளை சட்டங்களை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
சாதி எனும் கேவலமான கருத்தியலை அடியோடு அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அழிக்க முடியாது என்று கருதப்பட்ட பிற அடிமை முறை, இனவெறி போன்ற கடும் சவால்கள் எல்லாம் கடந்த காலங்களில் தகர்த்தெறியப் பட்டுள்ளன. எனவே, சாதி எனும் சுவரையும் நாம் தகர்த்தெறிய முடியும். தகர்த்தெறிய வேண்டும்.

கரி நாள் ஏப்ரல் 10.

வெருகல் படுகொலை - 4 வது ஆண்டு நினைவு தினம்
அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் ஏவலாளிகள் கிழக்கு மாகாணத்துக்குள் புகுந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய 175 போராளிகளை கொன்று வீசிய நாள். பெண்போராளிகளை மானபங்கம் செய்து குற்றுயிராக்கி கொலைவெறியாடிய நாள். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் இந்தபடுகொலையை நிறைவேற்றியதன் ஊடாக எந்தவரலாற்றின் தொடக்கத்தைக் கட்டிப்போட வன்னிப்புலிகள் முயன்றனரோ அந்த வரலாறு இன்று நிமிர்ந்து நிற்கிறது. அன்று கொன்று வீசப்பட்ட கிழக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அந்த கொடிய நாளை கரிநாளாக அனுஸ்டிக்கும் கிழக்குமாகாண மக்களுடன் எமது முன்னணியும் கரம்கோர்த்துக் கொள்கிறது.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
10-04-2008

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை - டி.அருள் எழிலன்-

எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து.பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில், நேற்று காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

பரமக்குடி தலித் படுகொலைகள்

* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம் வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல் போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான்.

* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது. தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து. பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில், நேற்று காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர்.

அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
சில கருத்துக்கள
..............................

* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம் வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல் போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான்.

* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது. தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல தளங்களிலும் விரிவு படுத்தப்பட்டது. இதுவே பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அரசு நிர்வாகத்தில், போலீசில் நீதி கேட்கவோ, பாதிப்புக்கு நியாயம் கேட்கவோ முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.

*தமிழ் தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் குழுக்களுக்குமான முரண் என்பது அவர்கள் தென் மாநிலங்களில் அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைத்துக் கொள்கிறார்கள். தமிழனை தமிழனே ஆளட்டும் வந்தேரிகள் எல்லாம் ஓடட்டும் என்பதுதான் தமிழ் குழுக்களின் அணுகுமுறை. தமிழர்களின் மலங்களை காலம் காலமாக தங்கள் தலையில் தூக்கிச் சுமந்த அருந்ததிய மக்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி திராவிட இயக்கத்தின் தலைமை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் அதிகாரமாக உள்ளதோ அது போன்றே தமிழ் தேசியக் குழுக்களும், இதை தலித்துக்கள் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். இவர்கள் ஈழம், தமிழ் மொழி, என்று போராடுகிறார்களே தவிற தமிழர்களின் வேறு எந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதும் இல்லை குரல் கொடுப்பதும் இல்லை. முருகன்,சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மட்டுமல்ல அப்சல்குரு, கஸாப், உள்ளிட்ட அனைவருக்காகவும் குரல் கொடுப்பதோடு இந்தியாவிலிருந்தே மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் முற்போக்கு மனித உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கை. பாராளுமன்றத் தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்ட பேரா.கீலானி வேலூருக்கு வந்து மூவரையும் சந்தித்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் அப்சல் குரு குறித்தோ, கஸாப் குறித்தோ மறந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசி விட மாட்டார்கள். காரணம் இந்து முன்னணி கும்பலையும் அர்ஜூன்சம்பந்த் போன்ற இந்துப் பாசிஸ்டுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடுமே என்ற அச்சம். பெரியார் திக, தோழர் தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்ட வெகு சில அமைப்புத் தலைவர்களைத் தவிற பெரும்பலான தமிழ் தேசியவாதிகள் தலித் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதுமே பேசியதில்லை. நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டால் எங்களை ஏன் கேட்கின்றீர்கள் கொன்றவனைப் போய் கேளுங்கள் என்கிறார்கள்.

* திராவிட இயக்கத்திற்கும் தமிழ் தேசிய இயக்கத்திற்குமான வேறு பாடு என்பது துளியளவுதான். அதிகாரத்தில் இருக்கும் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்திற்கு நெருக்கமான அதிமுகவாக இருந்தாலும், பச்சைத் தமிழ் திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய திமுகவாக இருந்தாலும் இவர்களின் அதிகாரத்தால் பலன் அடைவது பார்ப்பனர் அல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும்தான். திராவிட இயக்கத்திற்கென குறைந்த பட்ச சமூக சீர்திருத்த கோட்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்கு அது கூட இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தால் அதிகாரம் பெற்று அரசு நிர்வாகத்தில் வீங்கிச் செல்லும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக தேவர் சாதி அரசியலே தமிழ் தேசியத்தையும் வழி நடத்துகிறது. இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும் அவர் தார்மீக நெறிகளுக்கு அப்பால் நூறு தள்ளி நிற்கிறேன். 200 அடி தள்ளி நிற்கிறேன் நாம் இணைந்து ஈழ மக்களுக்காக உழைக்கலாம் என்று தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதும் தமிழ் தேசியவாதிகள் திருமாவை ஒதுக்கி வைப்பதையும் காண முடிகிறது. மௌனம் என்பது எவளவு பெரிய வன்முறை என்பதை தமிழ் தேசிய குழுக்களின் அணுகுமுறைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

* தலித்துக்கள் மீதான இந்த மரணதண்டனையை, இனப்படுகொலையை எவன் ஒருவன் கண்டிக்கத் தயங்குகிறானோ அப்போதே அவன் பயங்கரவாத இலங்கை அரசை கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறான். மூவருக்கும் மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லுகிற ஒருவன் தலித்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விரோத மரணதண்டனைக்கு எதிராகவும் பேசத் தவறுகிறான் என்றால் அவன் பகுத்தறிவுக்கு புறம்பானவனாக போலி முற்போக்காளனாக வாழ்கிறான் என்று பொருள்.

* மாணவர் பழனிக்குமாரை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தலித்துக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள், உத்தரவிட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக தென் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார், போலீஸ் அதிகாரிகள் சொந்த ஊரில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு அவர்களை சென்னை போன்ற நகரங்களில் பணியமர்த்துவதோடு, கலவரக் காலங்களில் வெளி மாநில போலீசாரைக் கொண்டு பதட்டச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். பெரும்பலான காவல்துறை அதிகாரிகள், போலிசார் தேவர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பல் வேறு உண்மையறியும் குழுவின் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தேவர் சாதி போலீசுக்கு மிக முக்கிய பங்கிருப்பதையும் நாம் கொடியங்குளத்தில் தொடங்கி தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலை வரை புரிந்து கொள்ள முடியும். தலித்துக்களுக்கு போலீஸ், அரசு நிர்வாகத்தில் உரிய பங்கீடுகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சாதியை போலீஸ் துறையில் கட்டுப்படுத்தும் படி சட்டம் இயற்றப்பட வேண்டும்.

* தேவர் சாதித் தலைவர் என்று சொல்லக்கூடிய முத்துராமலிங்கம் என்பவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல தலித் மக்களின் தலைவரான இமானுமேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது முத்து ராமலிங்கத்தின் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்.
* படித்தவர்கள் எல்லாம் சாதி பார்க்க மாட்டார்கள் என்ற தமிழனின் பொதுப்புத்தி இன்று உடைந்திருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளார்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த சாதியை மீற முடியாதவர்களாக இருக்கும் நிலையோடு அவர்கள் காக்கும் மௌனமும் இங்கே குறிப்பிடத்தக்கது.சொந்த சாதியை மறுத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்க்காக போராடும் பார்ப்பன நண்பர்களையும், தேவர் சாதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி நண்பர்களையும் நாம் பாராட்டுகிறோம். பல பத்தாண்டுகளின் பின்னர் இருண்ட மேகமாய் தலித் மக்கள் மீது பாய்ந்துள்ள தமிழக சாதி வெறி போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்போம்.

நன்றி: டி.அருள் எழிலன்