skip to main
|
skip to sidebar
அகன் அமுதன் -விழுப்புரம்
மிச்சம் விடப்பட்ட மீதி சரித்திரம் .
Home
About
Posts RSS
Contact
Log In
table border="0" width="100%">
எங்கள் வரலாறு என்றும் அழிவதில்லை நீங்கள் அழித்தாலும் நாங்கள் விடுவதில்லை....
மக்கள்
rrv
enathu Pakkangkal
mukappu
annan
Total Pageviews
Powered by
Blogger
.
Followers
About Me
karuna
View my complete profile
w3தமிழ் எழுதி
Search This Blog
Monday, November 22, 2010
ஈழம் ஒரு நாள் எழும் !அன்று இனவெறி தலைகீழாய் விழும் !!!
0 கருத்துரைகள்:
Post a Comment
Newer Post
Older Post
Home
Popular Posts
thamizharkalமனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ? எலி தொல்லை பெரிய தொல்லை பாருங்கோ. வீட்டில் மட்டுமல்ல வயலிலும் இதன் அட்டகாசம் பயங்கரம் தான் போல். சமீபத்தில் தமிழக சட்ட சபையில் தேமுக கட்சியினர் விவசாயிகளுக்கு எலிப் பொறி இனாமாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். கால் நூற்றாண்டு முன்பு, என் வீட்டில் அப்பாவின் நண்பர்கள் குடும்பம் எங்கள் குடும்பம் என 4 குடும்பமாக வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றிருந்தோம். அப்பாவுக்கு வேளாங்கண்ணி போனால் உணவகம் பிடிக்காது எங்களுக்கும் அப்படி தான் ஏன் என்றால் இட்லி தான் வாங்கி சாப்பிட வேண்டும் என கட்டளை இட்டு விடுவார். வெளியூர்காரர்கள் என்றால் அந்நியாயமா பில்லை போட்டிடுவான், கண்டது கடியதும் வாங்கி சாப்பிடாதீங்க என கூறி அடுப்பு, பானை, கரண்டி எல்லாம் வாடகைக்கு பிடித்து வேளாங்கண்ணியில் இருந்து வரும் வரை மீனும் சோறும் தான். அந்த சிறுபிள்ளை புத்தி இப்போது எனக்கு வேறுவிதமாக என் மகன்களிடமும் வருவது உண்டு. நாங்கள் ஹோட்டல் சென்றால் எங்கள் மகன்கள் உணவு அட்டவணயை கையில் எடுக்கும் போதே என்னுள் ஒரு எலி ஓட ஆரம்பித்து விடும். ஒரு போதும் கண்டிராத பெயராக தேடுவார்கள். உலகம் எங்கள் நெல்லையிலும் அடங்குவதால் வாயில் பெயர் வராத அனைத்து உலக- உணவு வகைகளும் இங்கு கிடைக்கும். அதன் விலை தான் கொடுமையானதாக இருக்கும் . பல போதும் சாப்பாடு பில்லை என்னவர் என்னிடம் காட்டுவதில்லை. நானும் பார்க்க விரும்புவதில்லை, பின்பு சாப்பிட்ட ருசி என்னை விட்டு ஓடி மறைந்து விடும் என்பதால்! எலிக்கதைக்கு வருகின்றேன். பாட்டியை வீட்டு காவலுக்கு வைத்து விட்டு வேளான்கண்ணி ஆலயம் சென்றிருந்தோம். நடு இரவில் நடப்பது போல் ஒரு சத்தம் கேட்டுள்ளது. பாட்டியும் பயந்து போய் பக்கத்து வீட்டு வைத்தியரை அழைக்க அவர் எங்க ஊர் ஆட்களை எல்லாம் அழைத்து கம்பும் தடியுமாக வீடு முழுதும் தேடியுள்ளனர். கடைசியில் பார்த்தால் ஒரு பெருச்சாளி தான் வீட்டின் உள்ளில் இருந்து ஓடியுள்ளது. பின்பு அம்மா கள்ளன் கொள்ளையடித்து போயிருந்தால் கூட இந்த மாதிரி வருத்த பட்டிருக்க மாட்டார்; பாட்டி ஊரை கூட்டி அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தான் பல நாட்கள் துயரத்தில் இருந்தார். எலியை சாவடிப்பது பெரும் பாடு. எங்கள் கடை எலியின் மாளிகையாக தான் இருந்தது. ஒன்றை கொன்றால் போட்டிக்கு என கூட்டம் கூட்டமாக குட்டி போட்டு வைத்திருக்கும். காலில் போடும் ஷூவில் இருந்து சாக்கு, மேஜை அறைகள், என அவை இல்லாது இடமே இல்லை என்றாகி இருந்தது. ஒரு பூனை வளர்த்து எலியை பிடிக்கலாம் என்றால் பூனை தரும் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. ஒரு முறை அப்படி தான் என் தம்பியார் எலியை அடிக்கிறேன் என்று தரை ஓட்டை அடித்து உடைத்து அவன் அடி வாங்கினது தான் மிச்சம் எலியோ தப்பி ஓடி விட்டது . இனி விஷம் வைத்து கொல்லாம் என்றால் அதன் நாற்றம் வீட்டை விட்டு விலக பல நாட்கள் ஆகும். விஷம் வைப்பது சொன்னால் எலி காதுக்கு கேட்டு விடும் என்பதால் இரு செவி அறியாது எலிப்பொறியில் சுட்ட தேங்காய் துண்டை இரவு வைத்து விடுவார்கள் அம்மா . பெரிய எலி என்றால் தேங்காயை தின்று விட்டு ஓடி இருக்கும். ஏப்ப சாப்ப குட்டி எலிகள் தான் மாட்டியிருக்கும். அதை லாவகமாக சாக்கில் போட்டு அடித்து கொல்வது தான் எங்கள் கடை பையனுகளின் வீரச்செயல்! எனக்கு எலி கண்ணை கண்டால் இரக்கம் பொத்து கொண்டு வரும் ஆனால் ஒரு முறை எங்கள் வீட்டு அலக்கு இயந்திரத்தின் குழாயை கடித்து சேதப்படுத்திய போது அத்துடன் என் கோபம் ஆரம்பம் ஆகியது. பெருச்சாளி கறி ரொம்ப சுவை என்று சுட்டு தின்னவர்கள் சொல்லியுள்ளார்கள். குற்றாலத்தில் குரங்கு நடப்பது போல் எங்கள் வண்டிபெரியாரில், இரைவில் பெருச்சாளி ரோடு வழி ஓடி நடக்கும். எலி வீட்டிற்க்குள் வந்து விட்டது என்றாலே பின்பு எங்களுக்கு கிலி தான். இதே மாதிரி ஒரு தொல்லை எலிகள் தான் தமிழக அரசியலில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்! தமிழன் என்றால் யார் தான் இவர்கள் பார்வையில்? அதற்க்கு என்ன தகுதி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழியில் தான் பேச வேண்டுமா? அல்லது ஈழத்தில் பிறக்க வேண்டுமா? நம்மூர் இன உணர்வாளர்களுக்கு தமிழர்கள் என்றால் ஈழ தமிழர்கள் மட்டும் தான்! அவர்களுக்கு ஒன்று என்றால் அறிக்கை விடுவார்கள் அரசியல் விளையாட்டு விளையாடுவார்கள். ஆனால் இது எல்லாம் அவர்கள் மேல் உள்ள பாசமா என்றால் அது தான் இல்லை. ஒன்று அரசியல் வியாபாரம் அடுத்தது பெண்கள் 7 நாட்களில், முகம் வெளுக்க பெfயர் & லவ்லி தேய்ப்பது போல் தன்னை இன உணர்வாளன் என்று நிலை நிறுத்துவது வழியாக அரசியலிலும் கொள்ளையிட ஒரு குறுக்கு வழி மட்டுமே. ஈழ தமிழர்கள் அறிவிலும் எழுத்திலும், தன்மான உணர்விலும், மொழி பற்றிலும் பல தமிழக தமிழர்களை விட சிறந்தவர்களே. சமீபத்தில் பிரான்ஸில் இருந்து வந்த என் ஈழ நண்பர் குடும்பத்துடன் உணவகம் சென்றிருந்தோம். எந்த ஊர் என்று கேட்டவர்களிடம் அவர் இலங்கை என்று சொல்வதை தான் காண இயன்றது. பிரான்ஸில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கூட தமிழில் நன்றாக கதைக்கின்றனர். அவர்கள் முகநூல், வலைப்பதிவு பக்கங்கள் எல்லாம் தமிழ் மொழியை பாவிப்பதையே விரும்புகின்றார்கள். நம் நிலை என்ன; சென்னை எப்போதோ பறங்கி தேசம் ஆகி விட்டது, இனி மதுரை, நெல்லை, கோயம்ப்த்தூர் என அதன் பிடியில் அகப்படும் நாள் வெகு அருகில் தான் உள்ளது. ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்; ஆசிரியை அழகான ஆங்கில உச்சரிப்புடன் ஒரு வெள்ளைகாரியை விட அழகாக ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். எவ்வளவு திறைமையான மொழி ஆற்றல் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தேன். ஒரு தமிழ் பாட்டுடன் நடனம், என்றதை அவர் இவ்வாறு "அடுத்து வருவது 'நல்ல நல்ல பில்லைகளை நம்பி'…..” நொந்து விட்டேன். இதுவே எல்லா நிகழ்ச்சியிலும் இங்கு காண்பது தான். “டமில் டாய் வால்த்து, குற்றுவிலக்கு” இதெல்லாம் இங்கு அறிவாளிகளின் லட்சணம். தமிழகத்தை பிடித்துள்ள ஒரு நோய்! நாங்கள் கேரளாவில் 75 வருடம் முன்பு குடியேறினோம் அங்கு நான் கண்ட தமிழ் ஆவல் இங்கு இருப்பது போல் தெரியவில்லை. சிறப்பாக சென்னையில் தமிழில் கதைத்து விட்டால் ரொம்ப கேவலைமான பார்வை நம்மை திரும்பி பார்க்கும். இந்த நோய் நம்மை விட ஆங்கிலம் கதைக்கும் மலையாளிகளிடம் கண்டதில்லை. ஈழ தமிழர்கள் கெட்ட நேரம்! போருக்கு முன்பு ஏதோ உங்கள் உதவியை நாடியிருப்பார்கள் அதற்க்கு தான் 3 லட்சத்திற்க்கு மேலான மக்கள் மரணத்திற்க்கும், 50 ஆயிரத்திற்க்கும் அதிகம் பெண்கள் விதைவை ஆவதற்க்கும், அவர்கள் இருந்த நினையை விட மிக மோசமாக ஆடு மாடுகள் போன்று முள் வேலிக்குள் முடக்கப்படுவதற்க்கும் உதவி செய்துள்ளீகள். தலீவா நாங்க உங்க பின்னால் உண்டு என உசுபேற்றி விட்டு தலைவர் பிராபகரன் வீட்டில் புலி வளர்க்கிறார் அப்படி இப்படி என்று பத்திரிக்கைகளில் கொடுத்து விளம்பரம் தேடி தன் அரசியல் வாழ்க்கையை வளப்படுத்தினர் இந்த இன உணர்வாளர்கள். மே 2009 நாளில் இங்கு நடந்தது தான் என்ன?; அங்கு மக்கள் போரில் உயிர் விட்டு கொண்டிருந்த போது எல்லா ஊடகவும் பாடல் ஆட்டத்தில் இருந்த்து. அதைக்கூட வசதியாக மறந்து விடுவோம், போர் மூண்ட போது முத்துகுமார் என்பவர் என் உடலை ஆயுதமாக்குங்கள் என கூறி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த நிகழ்வை பற்றி இயக்குனர் ராமின் கட்டுரை படிக்கும் போது வெள்ளையன் என்ற வியாபாரிக்கு, படம் பிடிக்கும் இயக்குனர்களுக்கு மற்றும் சாதாரண மக்களுக்கு இருந்த இன பாசம், பற்று கூட தலைவர்களுக்கு இல்லை என்று புரிந்து போய் விட்டது. மக்களுக்கு புரிந்ததாலே ஓய்வெடுத்து கொள்ளுங்கள் என வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள். ஆனால் இப்போது இந்த பெருச்சாளி, சுண்டெலி, பன்றி எலி, நச்செலி எல்லாம் சேர்ந்து ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டது. நெல்லையில் ஒரே சுவரொட்டிகள் தான் தமிழகத்தை தமிழ் இனத்தை காப்பாற்ற போகிறார்களாம். இது எல்லாமே நாடகம் என்று மக்கள் புரிந்துள்ளதை, இவர்கள் எப்போது புரிய போகிறர்கள்ன் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது. ஈழத்தில் இருந்து உலகநாடுகள் அனைத்திலும் குடிபெயர்ந்துள்ள ஈழ தமிழர்கள் அவர்கள் பிரச்ச்னைக்கான காத்திரமாக குரல் கொடுத்து கொண்டு இருக்கும் போது இவர்கள் அறிவு சாராது, உணர்ச்சி வேகத்தால் ஊளை இடுவதால் அவர்கள் குரலும் நசுக்கப் படத்தான் போகின்றது. ஈழ மண்ணின் பிரட்சனைகளுக்கு உண்மையாக தோள் கொடுபவர்களாக இருந்தால் போரால் வாழ்க்கை இழந்த பெண்களுக்கு வாழ்க்கைக்கு வழி சொல்லவோ அல்லது அங்கு அனாதமாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தத்து எடுக்கவோ, அவர்கள் அரசியல் பிரச்சனையை உணர்ச்சி வேகத்தில் எடுக்காது, உண்மையான மனித நேயத்துடன் கதைக்க முன் வருவார்கள். நம் மண்ணில் அகதியாக தஞ்சம் அடைந்த ஈழ மக்களின் கதி தான் என்ன? நாம் இன்று நினைத்தால் நமது தமிழகத்திலிலுள்ள அகதி முகாமில் சென்று எளிதில் அவர்களை சந்திக்க இயலுமா? அல்லது அவர்களையும் நம் சமூக ஓட்டத்தில் இணைத்து விட்டோமா? இலங்கை தமிழன் என்ற பாகுபாடுதான் அவர்களுக்கு இங்கும். ஏதோ தேற்வு நேரம் தலைவர்கள் அவர்களை சந்தித்து சிரித்து கதைக்கின்றனர். ஈழ மக்கள் உரிமைக்கு தன் உயிரை கொடுத்து போராடும் குழுக்கள் முகநூலிலும் உண்டு நானும் நட்பு வைத்திருந்தேன். சமீபத்தில் ஒரு ஈழ சகோதருக்கு படிப்பு வாய்ப்பு அறிய வினவினார். நல்ல பதில், கெட்ட பதில் என்றில்லை எந்த ஒரு பதிலும் வரவில்லை.… ஈழ தமிழர்களை விட ஆதரவில்லாத அடையாளமில்லாத தமிழக தமிழர்கள் உண்டு அவர்களுக்கு என இந்த இன உணர்வாளர்கள் என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா? குழந்தைகளை பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படும் எத்தனையோ பெற்றோர்கள், ஆதரவு இல்லாத சூழலால் தெருவில் தள்ளப்பட்ட பெண்கள், முதியவர்கள், குறைந்த பட்சம் குடியிருக்க ஒரு வீடு, இரவு சாப்பாட்டுக்கு வழி இல்லாத பல கோடி மக்கள், பன்னாட்டு அடிமைகள் ஆக்கப்படும் நம் இளைஞசர்கள், வானளவில் உயர்ந்த விலை ஏற்றம், இதை எல்லாம் இன உணர்வாளர்கள் அறிய நாம் ஈழத்தில் தான் பிறக்க வேண்டுமோ? இது மட்டுமா பிரட்ச்சனை சமச்சீர் கல்வி என்ற பெயரில் கல்வி மறுக்கப்படும் பள்ளி மாணவர்கள், தண்ணீர், மணல், கல்குவாரி என்ற பெயரில் இயற்க்கை சுரண்டலுகள், மக்கள் உயிரை குடிக்கும் அணு உலைகளின் நிறுவல்கள், எங்கு பார்த்தாலும் நாற்றம் பிடித்த தெருவுகள், சுகாதாரமற்ற பேருந்து நிலையங்கள், லஞ்சம் வாங்கும் அரசு அலுவலங்கள், கொள்ளையடிக்கப் படும் தனியார் ஊழியர்கள், பெண்கள் நலம் பாதிப்பு என எண்ணில் அடைங்காதவை. சமீபத்தில் தமிழகம் வந்த சிங்களர்களை அடித்து தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். போரை முன் நின்று நடத்தியவர்களிடம் சீட்டுக்கு என கைகட்டி வாய்கட்டி நின்ற உணர்வாளர்களூக்கு சாதாரண மக்களை கண்டவுடன் எப்படி வீரம் பொத்துகிட்டு வருகின்றது என்று தான் தெரியவில்லை. ஈழப்போர் அமெரிக்க -ரஷியா ; இந்தியா-சீன என்று மாறிவிட்ட சூழலில் உணர்ச்சி பேச்சுக்கு விடை கொடுத்து ராஜபக்சேவின் மனித உரிமை மீறல் பற்றி ஐநாவில் கொண்டு சென்று, அவர்கள் சொந்த மண்ணில் தன்மானமாக வாழ சாதகமான சூழல் உருவாக்கி கொடுப்பது தான் காலச் சிறந்தது. வன்னி மக்கள் இன்றும் முள்கம்பிக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இன்னும் பல ஆயிரம் ஈழப் போராளிகள் நிலை என்ன என்பதே தெரியவில்லை. உண்மையை சொன்னால் ஒரு ஈழ தமிழர்களுக்கும் இன உணர்வாளர்கள் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. இனியாவது இன உணர்வாளர்கள், தாங்கள் ஊதி கெடுத்த சங்கை உடைக்காது விட்டால் மிஞ்சிய கொஞ்சம் உயிர் வாழ இயலும்! Posted by J.P Josephine Baba at 5:51:00 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz Tags: Social-சமூகம் Reactions: 1 comments: நிரூபன் said... வணக்கம் சகோதரி, எலித் தொல்லைக்குத் தீர்வாக எலிப் பொறி வழங்கும் திட்டம், வரவேற்கப்பட வேண்டியது. ஈழ உணர்வாளர்கள்- தாம் வாழ ஈழ மக்கள் உணர்வினை வைத்துப் பிழைக்கும் நபர்கள். இவர்களைப் பற்றி பேச்செடுத்தாலே கோபம் தான் வரும். August 20, 2011 6:07 PM Post a Comment Links to this post Create a Link Older Post Home Share it About Me My Photo J.P Josephine Baba Tirunelveli, Tamilnadu, India creative,friendly,outspoken View my complete profile Followers Popular Posts பெண்களுக்கு மன அழுத்தம்! உலகில் மன அழுத்தத்தால் அதிகம் துண்புறும் பெண்கள் கொண்ட நாடு இந்தியாவாம் . 87. % பெண்கள் மன அழுத்த நோயால் துன்புறுகின்றார்களாம் .... எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும் தனது கல்லூரி நாட்களிலுள்ள தோழியே குறித்து எனது நண்பர் ஒருவர், கதைத்து கொண்டிருந்தார். குடிபோதையில் லாரி ஓட்டியவனால், பேருந்து நிறுத்ததில் நி... உறுமும் "உறுமி"! மலையாளத் திரைப்படம் உறுமி என்பது போரில் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும். சந்தோஷ் சிவம் இயக்கத்தில் பிரத்வி ராஜ், பிரபு தேவா , ஜெனிலியா நடி ப் பில் ... திரைக்கதை - மலையாளம் திரைப்படம் சில நாட்கள் இப்படி தான் எந்த வேலையிலும் மனம் ஈடுபடுவதில்லை . ஒரு மலையாளப்படம் கண்டு விடுவோமே என்று ‘ திரைக்கதை ’(Script) என்ற மலையாளப் பட... தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள் ... Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!! தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என ப... என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா!!!! இன்று ஒரு சிறு பெண்ணின் பூப் புனித விழாவுக்கு சென்றிருந்தோம். சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள். அவளுக்கு அ... திரும்பி பார்க்கையில்………மே - 19 14 வருடம் முன்பு இதே நாளில் பட்டு சேலை - நகையுடன் அன்றைய நாள் கதாநாயகியாக, உலகிலே அதிக மகிழ்ச்சி கொண்ட பெண்ணாக திளைத்தார் இந்த ஜோசபின். ... பத்மநாப அரண்மனை உங்களை வரவேற்கிறது!!! புலியூர்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டருக்குள், அல்லது கன்னியாகுமாரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wiki... என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள்............................ காலையில் அவசரமாக ஒரு பயணத்திற்க்கு தயாராகி கொண்டிருக்க எங்கள் வீட்டு நுழைவு வாயில் பக்கம் இருந்து அக்கா என்று ஒரு விளி ! எட்டி பார்த்தே... Recent News Blogger news widgeo.net Copyright (c) 2011 ஜோஸபின் கதைக்கிறேன்.. Designed for Online Scratch Cards and Horse Racing Od
periyararum thamizh makkalum ....
வணக்கம் தோழர்களே இந்து துவத்தில் பகுத்தறிவு இல்லாமை .சகொதோரதுவம் இல்லாமை , மனிதனை மனிதால் இழுவுபடுத்தும் நிலை அடக்குமுறைகள் ,சாதியால...
(no title)
பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை - டி.அருள் எழிலன்- எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலைய...
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம்
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (30) 30. ‘மார்க்சியவாதிகள்’ திசைமாறி ...
(no title)
இனங்களுக்கிடையிலேயான புரிந்துணர்வின் அவசியத்தை வலியுறுத்தும் அறிக்கையும்… புகலிட வெள்ளாள மார்க்சியமும்” January 21, 2012 C...
(no title)
வெள்ளைக் குதிரை’ : அறிமுகம் June 8, 2011 Comments Off -அசுரா- ஒன்றின் மீதான மதிப்பீடுகள் என்பது எப்போதுமே நிலையான தன்மையைக் கொண்டிரு...
(no title)
Sunday, July 17, 2011 விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்க படிவம் இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் ...
Paramakudi Kalavaram 04.3gp
பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை. பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது. சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை? இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள். ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம் கோடிப்புறத்து கிராமங்களின் குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது இங்கு மரணத் தீர்ப்பெழுத குறைந்த பட்ச சமுசயங்களே காணுமாயுள்ளது. என்று எழுதுகிறார் பானு. எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. 1. “மரண பயத்திடமிருந்து தலையை மறைப்பதை விட ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது.” 2. “ஒரு கவிதையையோ காகிதத்தையோ அல்லதொரு சிறு குறிப்பையோ பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?) சுட்டப்படும் இடங்களில் கூட மறைத்து வைப்பதென்பது தற்கொலைக்கச் சமனான செயல் ஏனெனில் எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும் முதலில் கைவிட்டுத் தேடுவது இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’ 3. ‘தெரு நாய்கள் கூட கடலை எண்ணையின் நாற்றம் தூரத்தில் வரவே வாலை மடக்கி யோனியைப் பொத்திக் கொண்டோடப் பழக்கப்பட்டு விட்டன.’ 4. ‘ஓ பாரதமே எல்லைகள் தாண்டி வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும் முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும் பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை அவர்களுக்குக் கொடு.’ பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது. நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ. சேர்ந்து…? ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ. எடுத்து…? நாட்டுக்காகப் போரடப் பொகிறேன். ஹா…ஹ…ஹா…ஹா… …. கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு. என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார். தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது. “…. நளத்தியென்றும் பள்ளி பறைச்சியென்றும் அழுகல் வாயால் சொல்லெறிந்து அடித்து விரட்டியதும் இந்தக் கடைசிக் கலட்டி வெளிக்குள்தான். மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து அடம்பிடிக்கிறதென் கவிதை. முஸ்டியை உயர்த்தி கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது. என்னவென்று? உங்கள் பல்லுக் கில்லெல்லாம் அடித்துடைக்கும் படி. …” இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள். நன்றி: மற்றது நேரம் 5/28/2011 07:03:00 AM 0 கருத்துரைகள்: Post a Comment இந்த இடுகையின் இணைப்புகள் Create a Link Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) உள்ளே/தலையங்கம் ▼ 2011 (23) ► Jul 2011 (1) ► Jun 2011 (2) ▼ May 2011 (3) பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- பொதுக்கூட்டம் – கலந்துரையாடல் COMMITTEE FOR THE RELEASE OF POLITICAL PRISONERS ► Mar 2011 (1) ► Feb 2011 (8) ► Jan 2011 (8) ► 2010 (229) ► 2009 (77) நூலகம் நூலகம் எமது இணைப்புகள் Indian Vanguard மவுனமொழி ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்! பெரியார் “மொழி” இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். இந்த மாநாட்டு மேடைக்கு வந்ததும், இங்கே ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோஷியலிஸ்ட், ஒரு காங்கிரசிஸ்ட் ஆக மூவர் பேசினார்கள். மூவரும் பார்ப்பானுக்குப் பரிந்து, மிகச் சலுகையாகப் பேசினார்கள். ஆனால் மூன்று பேரும் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள். அப்படி இவர்கள் கருதியிராவிட்டால், சொல்லாவிட்டால் இந்த சாதி ஒழிப்பு மாநாட்டு மேடையில் அவர்களுக்கு இடமேயில்லை; இடமிருக்க நியாயமுமில்லை. இந்த மூன்று பேரும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். ஏன்? இந்த மூன்று பேருக்கும் தலைவர்கள் பார்ப்பனர்கள். நீங்கள் நினையுங்கள். கம்யூனிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள்தானே! சோஷலிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அந்தக் கட்சித் தலைவரும் பார்ப்பனர்தானே? காங்கிரஸ் கட்சிக்காரர் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்கள் தலைவர்கள் யார்? இந்த ஆச்சாரியார், நேரு முதலிய பார்ப்பனர்கள்தானே! ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்; அந்த இந்து மதத்தில் உள்ள கடவுள்கள் ஒழிய வேண்டும்; அதிலே இருக்கிற ராமனும், சுப்பனும், கணபதியும் ஜாதியைக் காப்பாற்ற வந்தவர்கள் அல்லவா என்று கேட்கிறேன். இங்கே பேசிய கம்யூனிஸ்ட் சொன்னார், ‘‘நீங்கள் கடவுளை ஒழிக்கணும், ஒழிக்கணும் என்று பிள்ளையாரைப் போட்டு உடைத்ததால்தான் இப்போது எங்கேயும் பூஜை நடக்கிறது'' என்று. இன்னும் சொன்னார்: ‘‘சாதி ஒழியணும்; அதற்குப் பார்ப்பான் ஒழியணும் என்று வேகமாகப் போனால் ஜாதி வளரும்'' என்றார். நான் கேட்கிறேன், நீ மட்டும் முதலாளி ஒழியணும் என்றால், முதலாளி மட்டும் வளர மாட்டானா? உண்மையான காரணத்தை அறியாமலோ அல்லது அறிந்தும், மறைத்துப் பேசியே வருவது என்பது என்ன நியாயம்? பார்ப்பானைத் திட்ட இவர் களுக்குத் தைரியம் போதாது. கம்யூனிஸ்டுகள் சும்மா அளப்பார்கள், பணக்காரனை ஒழிக்கணும் என்று. பணக்காரனை நெருக்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா இவர்களுக்கு? பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது, போலிஸ் இருக்கிறது? ஏன் என்றால் அவன் அந்தப்படியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காக என்று சர்க்காருக்கு (அரசுக்கு) வரி செலுத்துகிறான். பணக்காரன் கிட்டே போகிறதுன்னா இவன் முதலில் சர்க்கார்கிட்டே போகணும். பார்ப்பான்கிட்டே இருப்பதெல்லாம் இந்தப் புராணம், இந்த மதம், இந்த சாஸ்திரம் முதலியவைதான். இவர்கள் சொல்கிறார்கள் ஜனங்களுக்குப் படிப்பில்லை என்று. யாருக்குப் படிப்பில்லை? செட்டிக்குப் படிப்பில்லை; படையாச்சிக்குப் படிப்பில்லை; நாயக்கனுக்குப் படிப்பில்லை. பார்ப்பானுக்கா படிப்பில்லை? அவன் வீட்டுப் பூனைக்குட்டி கூடப் படித்திருக்கிறதே! அவனுக்குச் சர்க்காரிலும் நல்ல வசதியிருக்கின்றதே! அதே மாதிரி நாட்டில் வேலையில்லாமை பெருகிவிட்டது என்கிறார்கள். யாருக்கு, எங்கே வேலையில்லா திண்டாட்டம்? நம்மவனுக்கு வேலையில்லை. இந்தக் கம்யூனிஸ்டுகள் என்னவென்றால், இதைப்பற்றின கவலை கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்று கூப்பாடு போடுகின்றார்கள்! நான் கேட்கிறேன், எந்தப் பார்ப்பானுக்காவது வறுமையுண்டா? சர்க்காரில் கஞ்சித் தொட்டி வைத்திருக்கின்றார்கள். எந்தப் பார்ப்பானய்யா அந்தக் கஞ்சித் தொட்டியில் போய் கஞ்சிக் குடித்தான்? சொல்ல முடியுமா? இந்தக் கம்யூனிஸ்டுகள், உடை பஞ்சம் என்று சொல்கின்றார்களே! பெரும்பாலான நம் பெண்கள் நான்கு முழம், எட்டு முழம், கட்டிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாறு அல்லவா கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பார்ப்பனப் பெண்கள் 18 முழம் அல்லவா கட்டிக் கொள்கின்றார்கள்? நம் பெண்கள் தாங்கள் கட்டியிருக்கும் அழுக்குப் பிடித்த புடவையைத் துவைக்கணும் என்றால், புடவையின் ஒரு முனையை இடுப்பில் கட்டிக் கொண்டல்லவா இன்னொரு முனையை நனைத்து துவைக்க வேண்டியிருக்கிறது? ஏன் நமக்கு மட்டும் இந்த நிலை? நாம் கீழ் ஜாதியில் இருப்பதனால்தான். சாதி என்பதை எல்லா வகையிலும் பார்ப்பான் உபயோகப்படுத்திக் கொண்டு முன்னே போகின்றான். உங்களுக்கு இருக்கிற சூத்திரத்தன்மை, உத்தியோகமில்லாத தன்மை ஒழியணும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கணும். இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். அப்பொழுதுதான் ஏதாவது வழி பிறக்கும். இங்கு இந்த ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றதற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கருதுகின்றேன். நீங்கள் யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள்! சாம்பலைப் பூசிக்கொள்ளாதீர்கள்! பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து பார்ப்பானை ‘சாமி' என்று கூப்பிடாதீர்கள்! அதைப்போல மடத்தனம் வேறு இல்லை. அத்துடன் அவனைப் ‘பிராமணன்' என்றால் நாம் நம்மை ‘சூத்திரன்' என்றே ஒப்புக் கொள்வதாகாதா? ஆகவே, இப்படிப்பட்ட சாதி ஒழிப்புக் காரியங்களில் எல்லோரும் சற்று அக்கறை செலுத்த வேண்டும். 9.3.1954ம் தேதி அக்கிச் செட்டிப்பாளையத்தில் ஆற்றிய உரை ----------------------------------------------- பாபாசாகேப் பேசுகிறார் ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான் -அம்பேத்கர்- இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது. சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை. இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார். அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94) ---------------------------------------------------- சாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது? -அம்பேத்கர்- சட்டத்தின் மூலமோ, பகுத்தறிவு ரீதியான உத்திகளாலோ தீண்டாமை மறைந்து விடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்துவிட முடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பதிலும் விருப்பம் இல்லை. ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றிணைந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவினர் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டுமே உள்ள போதுதான் இவ்வாறு இருக்க முடியும். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பார்ப்பனர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்கும் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டத்தகாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவர்களிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான். ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் இணைய விரும்பவில்லை. அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்கு சமமாகிவிடுவார்களோ என்று அவன் நினைக்கிறான். உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான். ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை. அவர்கள் தனது சமூக நிலைக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலைப் பெற்று விடுவார்களோ என்று அவன் அஞ்சுகிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளி விட விரும்புகிறான். ஆனால் அவன் மிகத் தாழ்ந்த வனுடனும் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் சமூக நிலையில் உயர்ந்து தனக்குச் சமமாகி விடுவான் என்று அவன் அஞ்சுகிறான். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர, முற்றிலும் உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பினரும் இல்லை. மற்ற வகுப்புக்குகூட, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒப்பிடும்போது, ஓரளவு உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்த சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது. தீண்டாமை, தீண்டத்தகாதவர்களுக்கு கெடுவாய்ப்பாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு அது ஒரு நல்வாய்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஓர் அமைப்பையும்; எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள ஓர் அமைப்பையும் இந்துக்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களாகவும் உள்ள ஓர் அமைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். தீண்டத்தகாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனி போட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாக குறுகிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் இப்பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும். இந்து சமூக அமைப்பு முழுவதும் குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால்தான் தீண்டாமை மறையும். இது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர் ஆற்றல் அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, மத அங்கீகாரங்கள் ஆகும். சாதி முறைக்குப் பின்னால் உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? கெடுவாய்ப்பாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் மத அங்கீகாரம் ஆகும். வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து மதத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் கருதப்படும் வேதங்களிலிருந்து பெறுகிறது. கெடுவாய்ப்பாக என்று நான் கூறுவதற்குக் காரணம், மத அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. ஓர் இந்துவுக்கு சாதி புனிதமானது, நிரந்தரமானது. சாதி மறைந்து போக முடியாது என்றால், தீண்டாமை ஒழிந்து போகும் என்ற நம்பிக்கைக்கு இடம் ஏது? (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கபிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை. பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது. சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை? இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள். ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம் கோடிப்புறத்து கிராமங்களின் குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது இங்கு மரணத் தீர்ப்பெழுத குறைந்த பட்ச சமுசயங்களே காணுமாயுள்ளது. என்று எழுதுகிறார் பானு. எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. 1. “மரண பயத்திடமிருந்து தலையை மறைப்பதை விட ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது.” 2. “ஒரு கவிதையையோ காகிதத்தையோ அல்லதொரு சிறு குறிப்பையோ பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?) சுட்டப்படும் இடங்களில் கூட மறைத்து வைப்பதென்பது தற்கொலைக்கச் சமனான செயல் ஏனெனில் எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும் முதலில் கைவிட்டுத் தேடுவது இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’ 3. ‘தெரு நாய்கள் கூட கடலை எண்ணையின் நாற்றம் தூரத்தில் வரவே வாலை மடக்கி யோனியைப் பொத்திக் கொண்டோடப் பழக்கப்பட்டு விட்டன.’ 4. ‘ஓ பாரதமே எல்லைகள் தாண்டி வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும் முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும் பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை அவர்களுக்குக் கொடு.’ பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது. நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ. சேர்ந்து…? ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ. எடுத்து…? நாட்டுக்காகப் போரடப் பொகிறேன். ஹா…ஹ…ஹா…ஹா… …. கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு. என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார். தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது. “…. நளத்தியென்றும் பள்ளி பறைச்சியென்றும் அழுகல் வாயால் சொல்லெறிந்து அடித்து விரட்டியதும் இந்தக் கடைசிக் கலட்டி வெளிக்குள்தான். மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து அடம்பிடிக்கிறதென் கவிதை. முஸ்டியை உயர்த்தி கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது. என்னவென்று? உங்கள் பல்லுக் கில்லெல்லாம் அடித்துடைக்கும் படி. …” இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள். நன்றி: மற்றது நேரம் 5/28/2011 07:03:00 AM 0 கருத்துரைகள்: Post a Comment இந்த இடுகையின் இணைப்புகள் Create a Link Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) உள்ளே/தலையங்கம் ▼ 2011 (23) ► Jul 2011 (1) ► Jun 2011 (2) ▼ May 2011 (3) பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- பொதுக்கூட்டம் – கலந்துரையாடல் COMMITTEE FOR THE RELEASE OF POLITICAL PRISONERS ► Mar 2011 (1) ► Feb 2011 (8) ► Jan 2011 (8) ► 2010 (229) ► 2009 (77) நூலகம் நூலகம் எமது இணைப்புகள் Indian Vanguard மவுனமொழி ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்! பெரியார் “மொழி” இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். இந்த மாநாட்டு மேடைக்கு வந்ததும், இங்கே ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோஷியலிஸ்ட், ஒரு காங்கிரசிஸ்ட் ஆக மூவர் பேசினார்கள். மூவரும் பார்ப்பானுக்குப் பரிந்து, மிகச் சலுகையாகப் பேசினார்கள். ஆனால் மூன்று பேரும் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள். அப்படி இவர்கள் கருதியிராவிட்டால், சொல்லாவிட்டால் இந்த சாதி ஒழிப்பு மாநாட்டு மேடையில் அவர்களுக்கு இடமேயில்லை; இடமிருக்க நியாயமுமில்லை. இந்த மூன்று பேரும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். ஏன்? இந்த மூன்று பேருக்கும் தலைவர்கள் பார்ப்பனர்கள். நீங்கள் நினையுங்கள். கம்யூனிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள்தானே! சோஷலிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அந்தக் கட்சித் தலைவரும் பார்ப்பனர்தானே? காங்கிரஸ் கட்சிக்காரர் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்கள் தலைவர்கள் யார்? இந்த ஆச்சாரியார், நேரு முதலிய பார்ப்பனர்கள்தானே! ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்; அந்த இந்து மதத்தில் உள்ள கடவுள்கள் ஒழிய வேண்டும்; அதிலே இருக்கிற ராமனும், சுப்பனும், கணபதியும் ஜாதியைக் காப்பாற்ற வந்தவர்கள் அல்லவா என்று கேட்கிறேன். இங்கே பேசிய கம்யூனிஸ்ட் சொன்னார், ‘‘நீங்கள் கடவுளை ஒழிக்கணும், ஒழிக்கணும் என்று பிள்ளையாரைப் போட்டு உடைத்ததால்தான் இப்போது எங்கேயும் பூஜை நடக்கிறது'' என்று. இன்னும் சொன்னார்: ‘‘சாதி ஒழியணும்; அதற்குப் பார்ப்பான் ஒழியணும் என்று வேகமாகப் போனால் ஜாதி வளரும்'' என்றார். நான் கேட்கிறேன், நீ மட்டும் முதலாளி ஒழியணும் என்றால், முதலாளி மட்டும் வளர மாட்டானா? உண்மையான காரணத்தை அறியாமலோ அல்லது அறிந்தும், மறைத்துப் பேசியே வருவது என்பது என்ன நியாயம்? பார்ப்பானைத் திட்ட இவர் களுக்குத் தைரியம் போதாது. கம்யூனிஸ்டுகள் சும்மா அளப்பார்கள், பணக்காரனை ஒழிக்கணும் என்று. பணக்காரனை நெருக்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா இவர்களுக்கு? பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது, போலிஸ் இருக்கிறது? ஏன் என்றால் அவன் அந்தப்படியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காக என்று சர்க்காருக்கு (அரசுக்கு) வரி செலுத்துகிறான். பணக்காரன் கிட்டே போகிறதுன்னா இவன் முதலில் சர்க்கார்கிட்டே போகணும். பார்ப்பான்கிட்டே இருப்பதெல்லாம் இந்தப் புராணம், இந்த மதம், இந்த சாஸ்திரம் முதலியவைதான். இவர்கள் சொல்கிறார்கள் ஜனங்களுக்குப் படிப்பில்லை என்று. யாருக்குப் படிப்பில்லை? செட்டிக்குப் படிப்பில்லை; படையாச்சிக்குப் படிப்பில்லை; நாயக்கனுக்குப் படிப்பில்லை. பார்ப்பானுக்கா படிப்பில்லை? அவன் வீட்டுப் பூனைக்குட்டி கூடப் படித்திருக்கிறதே! அவனுக்குச் சர்க்காரிலும் நல்ல வசதியிருக்கின்றதே! அதே மாதிரி நாட்டில் வேலையில்லாமை பெருகிவிட்டது என்கிறார்கள். யாருக்கு, எங்கே வேலையில்லா திண்டாட்டம்? நம்மவனுக்கு வேலையில்லை. இந்தக் கம்யூனிஸ்டுகள் என்னவென்றால், இதைப்பற்றின கவலை கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்று கூப்பாடு போடுகின்றார்கள்! நான் கேட்கிறேன், எந்தப் பார்ப்பானுக்காவது வறுமையுண்டா? சர்க்காரில் கஞ்சித் தொட்டி வைத்திருக்கின்றார்கள். எந்தப் பார்ப்பானய்யா அந்தக் கஞ்சித் தொட்டியில் போய் கஞ்சிக் குடித்தான்? சொல்ல முடியுமா? இந்தக் கம்யூனிஸ்டுகள், உடை பஞ்சம் என்று சொல்கின்றார்களே! பெரும்பாலான நம் பெண்கள் நான்கு முழம், எட்டு முழம், கட்டிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாறு அல்லவா கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பார்ப்பனப் பெண்கள் 18 முழம் அல்லவா கட்டிக் கொள்கின்றார்கள்? நம் பெண்கள் தாங்கள் கட்டியிருக்கும் அழுக்குப் பிடித்த புடவையைத் துவைக்கணும் என்றால், புடவையின் ஒரு முனையை இடுப்பில் கட்டிக் கொண்டல்லவா இன்னொரு முனையை நனைத்து துவைக்க வேண்டியிருக்கிறது? ஏன் நமக்கு மட்டும் இந்த நிலை? நாம் கீழ் ஜாதியில் இருப்பதனால்தான். சாதி என்பதை எல்லா வகையிலும் பார்ப்பான் உபயோகப்படுத்திக் கொண்டு முன்னே போகின்றான். உங்களுக்கு இருக்கிற சூத்திரத்தன்மை, உத்தியோகமில்லாத தன்மை ஒழியணும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கணும். இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். அப்பொழுதுதான் ஏதாவது வழி பிறக்கும். இங்கு இந்த ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றதற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கருதுகின்றேன். நீங்கள் யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள்! சாம்பலைப் பூசிக்கொள்ளாதீர்கள்! பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து பார்ப்பானை ‘சாமி' என்று கூப்பிடாதீர்கள்! அதைப்போல மடத்தனம் வேறு இல்லை. அத்துடன் அவனைப் ‘பிராமணன்' என்றால் நாம் நம்மை ‘சூத்திரன்' என்றே ஒப்புக் கொள்வதாகாதா? ஆகவே, இப்படிப்பட்ட சாதி ஒழிப்புக் காரியங்களில் எல்லோரும் சற்று அக்கறை செலுத்த வேண்டும். 9.3.1954ம் தேதி அக்கிச் செட்டிப்பாளையத்தில் ஆற்றிய உரை ----------------------------------------------- பாபாசாகேப் பேசுகிறார் ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான் -அம்பேத்கர்- இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது. சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை. இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார். அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94) ---------------------------------------------------- சாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது? -அம்பேத்கர்- சட்டத்தின் மூலமோ, பகுத்தறிவு ரீதியான உத்திகளாலோ தீண்டாமை மறைந்து விடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்துவிட முடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பதிலும் விருப்பம் இல்லை. ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றிணைந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவினர் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டுமே உள்ள போதுதான் இவ்வாறு இருக்க முடியும். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பார்ப்பனர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்கும் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டத்தகாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவர்களிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான். ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் இணைய விரும்பவில்லை. அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்கு சமமாகிவிடுவார்களோ என்று அவன் நினைக்கிறான். உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான். ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை. அவர்கள் தனது சமூக நிலைக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலைப் பெற்று விடுவார்களோ என்று அவன் அஞ்சுகிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளி விட விரும்புகிறான். ஆனால் அவன் மிகத் தாழ்ந்த வனுடனும் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் சமூக நிலையில் உயர்ந்து தனக்குச் சமமாகி விடுவான் என்று அவன் அஞ்சுகிறான். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர, முற்றிலும் உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பினரும் இல்லை. மற்ற வகுப்புக்குகூட, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒப்பிடும்போது, ஓரளவு உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்த சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது. தீண்டாமை, தீண்டத்தகாதவர்களுக்கு கெடுவாய்ப்பாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு அது ஒரு நல்வாய்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஓர் அமைப்பையும்; எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள ஓர் அமைப்பையும் இந்துக்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களாகவும் உள்ள ஓர் அமைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். தீண்டத்தகாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனி போட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாக குறுகிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் இப்பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும். இந்து சமூக அமைப்பு முழுவதும் குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால்தான் தீண்டாமை மறையும். இது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர் ஆற்றல் அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, மத அங்கீகாரங்கள் ஆகும். சாதி முறைக்குப் பின்னால் உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? கெடுவாய்ப்பாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் மத அங்கீகாரம் ஆகும். வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து மதத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் கருதப்படும் வேதங்களிலிருந்து பெறுகிறது. கெடுவாய்ப்பாக என்று நான் கூறுவதற்குக் காரணம், மத அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. ஓர் இந்துவுக்கு சாதி புனிதமானது, நிரந்தரமானது. சாதி மறைந்து போக முடியாது என்றால், தீண்டாமை ஒழிந்து போகும் என்ற நம்பிக்கைக்கு இடம் ஏது? (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 101) ----------------------------------------------------- பார்வையிட்டவர்கள் breast augmentation தற்போது பார்வையிடுவோர் வாசகர் நாடுகள் free counters படைப்புகள் அனுப்ப, ஏனைய தொடர்புகளுக்கு: E-mail: editor.uyirmei@hotmail.com பனிமொழி -தமயந்தி- பனிமொழி -தமயந்தி- படத்தில் கிளிக் செய்து காண்க
(no title)
“இலங்கையில் தோன்றிய சாதியமும் அதன் பின்னணியம்” December 7, 2010 Comments Off கனடாவில் நடைபெற்ற “பன்முகவெளி2″ இல் ஆற்றிய உரையின் கட்டுரை வட...
Photos2
Photos1
Photos
Blog Archive
►
2013
(1)
►
October
(1)
►
2012
(24)
►
October
(3)
►
September
(2)
►
February
(6)
►
January
(13)
►
2011
(48)
►
November
(1)
►
September
(15)
►
August
(13)
►
July
(13)
►
January
(6)
▼
2010
(20)
►
December
(3)
▼
November
(16)
ஈழம் ஒரு நாள் எழும் !அன்று இனவெறி தலைகீழாய் விழும்...
chennai law college fight!!!!!!!!
Dalit Festival 2010:Gov. Alfonso D. Tan college
Buddham Saranam Gachami - Angulimal
ADANGA MARU - SHORT FILM - PART 1
sinthanai selvan,VIDUTHALAI CHIRUTHAIGAL KATCHI,GE...
viduthalai chiruthaigal membership campaign by sin...
Dr. bhimrao ambedkar - hajar pacshe chya notavar
Immortal voice of Dr Ambedkar: Speech(English)
Dr.Babasaheb Ambedkar - Convertion to Buddhism[Cli...
Dr. Babasaheb Ambedkar Movie - Buy at zinemaya.com
DR B R AMBEDKAR FROM JABAR PATEL'S MOVIE
Sinhala Buddhist Song-Himi Sanaramara.mpg
thamizh thesiya thalaivarkalum avarkalin arasiy...
தமிழ்நாடு
Master advanced features - Share
►
October
(1)
0 கருத்துரைகள்:
Post a Comment